அன்பே ஆருயிரே என்று
அழைத்ததில்லை !
ஆனந்தமாய் கட்டி
அணைத்ததில்லை !
ஆனாலும் இது காதல்
இருந்தும் இங்கே மோதல் !
அருகருகே இருந்தும்
அரவமில்லை அங்கே !
முத்தம் கொடுத்தாய்
உச்சி முகர்ந்தாய் !
அன்பை கொடுத்தாய்
அதையே வேண்டினாய் !
சொந்தமும் இல்லை
சுற்றமும் இல்லை !
தேடி வந்தாய் நீ
ஓடி வந்தேன் நான் !
வெப்பமும் இல்லை
வெயிலும் இல்லை !
குளிரும் இல்லை
மழையும் இல்லை !
உருக்கினாய் என்னை
உறைந்துபோனேன் நான் !
No comments:
Post a Comment