Total Pageviews

Thursday, March 31, 2011

என்னையே மறந்தேன் !!!!!!!!!!!!

நினைத்தாலே முத்தமிட  
தூண்டும் உன் கன்னம் 
பார்த்தாலே பரவசமூட்டும்
உன் முகம் நீ பேசும்
ஒவ்வொரு வார்த்தைகளும் 
முத்துக்களாய் .......உன் 
சிரிப்பொலி கோவில் 
மணியாய் கண்ணில் 
கண்டவரைஎல்லாம்  கைக்குள் 
போட்டுக்கொள்ளும் உன் 
கண்களில் உள்ள சக்தி 
உன் குரலில் உள்ள ரீங்காரம் 
இப்படி உன்னை ஒவ்வொன்றாய் 
ரசித்த நான்  இப்போது 
என்னையே மறந்து போனேன்   ...............

வரமும் சாபமும் !!!!!!!!!!!!!!!!!!

ஒரு முறை அடி எடுத்து
வைத்துவிட்டால் அதில் 
வேறு எந்த நினைவுகளுக்கும் 
இடம் தராதே உன் பாதையில்
கல்லும் வரும் முள்ளும் 
வரும் நிம்மதியை தேடி 
நீ செல்லாதே நீ எங்கு 
 சென்றாலும் நிம்மதி 
உன்னை தேடி உன் 
காலடியில் வரவேண்டும் 
தட்டுப்படும் அனைத்தையும் 
தாண்டி செல் வெற்றி 
உனதே என்ற அடுத்தவரின் 
கூக்குரல் மட்டுமே உன் 
காதுகளில் ஒலிக்கும் 
சோர்ந்து போகாதே 
போவதை விட்டுவிடு 
வந்ததை காத்துக்கொள் 
வந்தது வரம் போனது சாபம்

இங்கே நான் எதற்கு ????????????

உன் சுவாசத்தில் 
சுவாசமாய் நான் 
உன் உயிரில் 
உயிராய் நான் 
உன் இதயத்தின் 
துடிப்பாய் நான் 
உன் கண்களின்
இமையாய்  நான் 
நீ பேசும் வார்த்தைகளில் 
சொற்களாய்  நான்
உன் உறக்கத்தில் 
கணவாய் நான் 
நீ நடக்கும் போது 
உன் நிழலாய் நான் 
உன் உதட்டில் 
புன்னகையாய் நான் 
இப்படி உன்னுடைய 
எல்லாமாக நான் 
இருக்கும்போது 
இங்கே நான் எதற்கு
தனியாக நானாய் ??????????

உன் நிழலாய் !!!!!!!!!!!!!!!

என்னை விட்டு நீ 
எவ்வளவு தூரம் விலகி 
சென்றாலும் உன்னை 
விட்டு பிரியேன்  நான் 
என்னை படைத்தவன் 
எனக்கு கொடுத்த கட்டளை 
உன்னை பின்தொடர் என்று
நீ எங்கு சென்றாலும்
நானும் உன்னை 
பின்தொடர்வேன் 
உன் நிழலாய் .............

தனிமையில் தியானம் !!!!!!!!!

அன்பு என்ற ஆயுதத்தை
கொண்டு கட்டும்  பாய் மரம்
தான் நம் பந்தம் கனவில்
காணும் யாவும் ஒரு
காவியமாய் இங்கே
இதயத்தில் போர்க்களம்
ஆசையை  வெல்ல நினைத்து
இருள் சூழ்ந்த வேளையில்
பயத்தினால் தனிமையில்
ஆழ்மனம் செய்யும் தவம்
அமைதியாய் தியானம்
கண்களில் நீரோட்டம் காரணம்
தோன்றவில்லை அதுவும்
ஒரு நாள் அடங்கும்
உன்னை நேரில் கண்டதும் ....... 

Wednesday, March 30, 2011

சுடும் சூரியன் !!!!!!!!!!!

விடியற்காலை மஞ்சள் 
சூரியன் ஏனோ இங்கு 
தன கத்திகளை என் முன் 
வீசிக்கொண்டு வருகிறான் 
என்னை எரித்துவிடுபவனை
போல அவன்  வேகத்திர்ற்கு 
என் மனம் ஈடு கொடுக்குமா 
அதை தாங்கி கொள்ளும் 
சக்தி என் மனதிற்கும் 
உடலுக்கும் உள்ளதா 
சூரிய ஒளி உடலுக்கு
நல்லதுதான் ஆனால் 
இது சுடும் சூரியனாயிற்றே 
அதனால்தான் ஓடி 
ஒளிந்துகொள்ள நினைக்கிறேன் 

செம்மண் பூமி !!!!!!!!!!!!

உலர்ந்திருந்த செம்மண்
 பூமியில் ஒற்றை மரம் 
ஏனோ தெரியவில்லை 
அருகில் இருக்கும் அந்த
பசுமையான புல்வெளி 
கண்ணில் படவேயில்லை 
என் மனமும் உன்
 நினைவுகளை சுமந்து 
உலர்ந்துபோனதாலா  .............???

வாழ்க உன் நட்பு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உன்னை கண்ட நாள்முதல்
இன்றுவரை உன்னையும்
உன் கண்களையும் ஒருபோதும்  
கவனிக்க தவறியதில்லை 
எப்போதும் ஏதாவது 
ஒரு தேடல் ஆனால் தேடும் 
விஷயம் தான் என்ன .... 
எப்போதும் உதட்டின் ஓரம் 
சிறு புன்னகை  ஒட்டி 
வைத்திருக்கிறாயே ! 
அதற்க்கு இணையாக வேறு 
ஏதும்  கண்டாயா இங்கே .... 
குளிர்சாதன பெட்டியில் 
வைத்திருக்கும் பொருட்களைப்போல்
எப்போதும் கெடாமல் 
பாதுகாத்து வைத்திருக்கும் 
உன் நட்பு வட்டாரங்கள் 
என்றும் அதே பூ மனத்துடன் 
உன் மனதில் வாழ்க உன் நட்பு ...

சலனம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அந்த இருள் சூழ்ந்த மாலை 
வேளையில் மங்கிய 
நிலவொளியில் கடற்கரை 
மணலில் காலடி தடம் 
பதித்து இருவரும் நிற்கையில் 
அலைகளினூடே தெரிந்த நம் 
இருவரின் நிழல் பிம்பங்களை 
பார்த்த எனக்குள் கண நேர 
சலனம் என்னை அறியாமலேயே 
என் மனது உன்னை நேசிக்க 
தொடங்கியது கட்டுப்பாட்டை 
இழப்பதற்குள் விலகி
நின்றேன் விருப்பமில்லாமல் 
ஆனாலும் என் நினைவுகளில் 
உன் நிழல் பிம்பம் என் 
ஆசைகள் எல்லை மீறும்  
அன்று கட்டி அணைப்பேன் 
நானும் உன்னை நிழலாய் ........

Thursday, March 24, 2011

நீ நீதான் !!!!!!!!!!!!

குழல் இனிது யாழ் இனிது
என்பர் உன் குரல்
கேட்கா மூடர்
நிலவிநிது வானினிது
என்பர் உன் முகம்
கானா குருடர்

உன் பிஞ்சு விரல்களை
தொட்டவர்  பஞ்சையும்
தொட அஞ்சுவர் தொட்டவர்
மீண்டும் மீண்டும் கெஞ்சுவர்

உன் அன்பு மழையில்
நனைந்தவர் உடலை
வியர்வை நீர் கூட
தீண்ட மறுக்கும் 

 இந்த உலகில் உள்ள 
மானிடரில் நீ ஒரு தனி 
பிறவி இங்கு உனக்கு 
நிகர் நீ தான் நீ மட்டும் தான் 








நினைவுகள் !!!!!!!!!!

வேண்டி வேண்டி கேட்ட
போதெல்லாம் ஓடி ஓடி
போனாய் ஒதுங்கி நிற்கையில்
விரும்பி வருகிறாய்
வேண்டாம் என்று
தள்ளி விடவா  இல்லை
வா என்று  அள்ளி கொள்ளவா
உன் காலடி தடம் பதிந்த
இந்த இடத்தில் காற்றுக்கும்
அனுமதி இல்லை அன்றோ
உன் நினைவுகளை விட்டு சென்ற
அந்த இடத்தை பார்க்க மீண்டும் வா

Wednesday, March 23, 2011

காண வேண்டும் !!!!!!!!!!

ஓட்டை குடத்தில் 
வழியும் நீரை போல 
உடைந்த என் 
இதயத்திலிருந்து 
வழிந்துகொண்டிருக்கும் 
உன் நினைவுகள் 

சொந்தங்கள் தூக்கி 
எறிந்த போதும் 
உன் அன்பின் துணை 
கொண்டு சுற்றினேன் 
ஊரெல்லாம் 

புண் பட்ட இடத்தில்
புரையோடிய புன்னை
போல என் கண் பட்ட 
இடமெல்லாம் காண 
வேண்டும் உன்னை ................


எதிர்காலம் ..........

பச்சை தண்ணீரில் ஒற்றை 
நாணலாய் நான் இங்கும் 
அங்கும் தள்ளாட ஓரமாய் 
நின்று வேடிக்கை பார்க்கும் நீ 

சாளரத்தில் கூடு கட்டும் 
சிட்டுக்குருவிக்கும் சின்ன 
இதயமுண்டு எங்கே 
போனது உன் இதயம் 

தொட்டி மீனின் ஏக்கத்தை 
போல கட்டி போட்ட என் 
கனவுகள் எதிர்வரும் 
காலங்களை நோக்கி ..............



போராட்டம் !!!!!!!!!!!!!!!!!!


அமைதியான மாலை நேரம் 
அலைகடலென 
எண்ணங்களின் ஓட்டம் 
காற்றில் வாரி 
இறைக்கப்பட்ட 
மணலாய் சிந்தனை 
சிதறல்கள் புயலில் சிக்கி 
போராடும் சின்ன 
மரத்துண்டாய் என் 
வாழ்க்கை இங்கும் அங்கும் 
போராட கைகொட்டி சிரிக்கும் 
கைக்குழந்தையாய் இன்றும்  நீ 

ஒற்றை மரம் .........

ஒற்றை மரத்தடியில் 
ஓரமாய் நான் 
கண்களில் சோகம் 
நெஞ்சினில் பாரம் 
கையில் இருந்த கவிதை 
காகிதம் காற்றினில் ஆட 
பௌர்ணமி நாளின் 
பைத்தியக்காரனாய் நான் 
கையில் கொடுக்க உலோகம் 
இல்லை உன் உறவு இல்லையேல் 
இந்த உலகம் எனக்கில்லை ..........

Tuesday, March 22, 2011

நினைவு மேகம் .................


 பூக்களில் நிறம் மாறி
 பார்த்ததுண்டு ஆனால் 
மனிதரில் நிறம் மாறி  
இப்போதுதான் பார்க்கிறேன்  
 பொய் என்றால் 
என்னவென்று நீ 
புரியாமல் கேட்டதுண்டு . 
நீயே பொய்யாய் போவாய் 
என்று நினைத்ததில்லை 
புகை மூட்டம் மறையும்
 பனி மூட்டம் மறையும் 
ஆனால் என் நினைவில் 
கலந்து விட்ட உன் நினைவு
 மேகம் என்று மறையும் ? 

Monday, March 21, 2011

மீண்டும் வேண்டும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!


உன்னை நினைத்தேன் முதல் முதல்
 நாம் சந்தித்த அன்றிலிருந்து இன்றுவரை
 ஏதும் புரியாத ஒரு நிலை என்னிடம்
 நீ காட்டிய அதே அன்பு இன்றுவரை
 ஏனோ தெரியவில்லை பல 
நேரங்களில் உன் மீது எனக்கு
 கோபம் தான் வந்தது காரணம் 
எனக்கே தெரியவில்லை 
ஆனாலும் உன்னை மீண்டும் 
சந்திக்கையில் அந்த 
கோபம் ஆதவனை கண்ட 
பனித்துளியாய் மறைந்து 
போகும் ஆனால் இன்று நீ எங்கு
 எப்படி இருக்கிறாய் என்ற 
நிலை கூட தெரியாமல் 
உன் நினைவுகளை மட்டும் மனதில் 
சுமந்தபடி நான் .மீண்டும் வேண்டும் 
அதே அன்பு தருவாயா வருவாயா ?

மீண்டும் அவள் வருவாளா ??????????????????

அன்றுதான் அவளை முதன் முதலில் சந்தித்தேன் , சின்ன பெண் அழகு என்று கூற இயலாது , அவளை பார்த்த நேரம் அந்த மாதிரியானது , நல்ல உறக்கம் நாள் முழுதும் வேலை பார்த்த களைப்பு , உறக்கத்தில் புரண்டு படுத்த எனக்கு ஏனோ விழிப்பு வந்தது அது எப்படி என்பது இன்றுவரை தெரியவில்லை . 

என் படுக்கைக்கு அருகில் ஒரு மேஜையும் ஒரு நாற்காலியும் போட்டிருந்தேன் . படுக்கையில் புரண்டு படுத்த நான் ஒருபுறம் சாய்ந்திருந்தேன் கண்ணை லேசாக திறந்தேன் ஏன் அருகில் யாரோ .......... யார் அது ? அதுவும் அந்த நாற்காலியில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள் அந்த சிறிய பெண் , வயது எட்டு முதல் பத்து வரை இருக்கும் . 

நான் அவளை பார்த்ததும் அவள் மகிழ்ந்தாளா இல்லையா என்று என்னால் யூகிக்க இயலவில்லை . அவளின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை . நான் அவளிடம் நீ யார் என்றேன் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என்றேன் என் கேள்வியை கவனித்தவளாகவே தெரியவில்லை அமைதியாக என்னை பார்த்துகொண்டிருந்தாள் அந்த பெண் .

என்னை போலவே அவளும் கத்தில் ஒரு தங்க வளையம் அணிந்திருந்தாள் அதை பார்த்த நான் என்ன நீ என்னை போலவே தங்க வளையம் அணிதிருக்கிராயே என்றேன் அதற்கும் பதில் இல்லை அவளிடம் . என்னை பார்த்துகொண்டிருப்பதை தவிர வேறு ஒன்றும் அவள் செய்தாளில்லை. 

திடீரென்று என் அறையின் கதவு திறந்து என் அம்மா வந்தாள், என்னை பார்த்து என்ன ஆச்சி ஏன் என்னை அழைத்தாய் என்றாள் .... என்ன ........ நான் அழைக்கவில்லையே என்றேன் ... பிறகு தண்ணீர் வேண்டும் குடிக்க என்றேன் . என் மீது அம்மாவுக்கு மிகுந்த அக்கறை பாசம் அதனால் நான் கேட்டதும் போய் தண்ணீர் கொண்டுவந்தாள். தண்ணீரை குடித்துவிட்டு அம்மா சென்றதும் மீண்டும் உறங்க தயாரானேன் நான் .

வெளியில் லேசாக மழை தூரிகொண்டிருந்தது .. ... ரசிக்க வேண்டிய ஒன்று ஆனால் ரசிப்பதற்கு இது நேரமில்லையே .. சரி உறங்கலாம் என்று நினைத்ததும் அவளின் நினைவு எங்கே அந்த பெண் ? இங்கேதானே அமர்ந்திருந்தாள் எங்கே போனாள் ?


சரி அவள் எங்கு சென்றால் என்ன என்று நினைக்கையில் ஜன்னலுக்கு வெளியில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு அங்கே அவள் அதே பார்வை . ஐயோ மழை வேறு தூரிகொண்டிருக்கிறதே நனைந்துவிட போகிறாள் என்று எண்ணி அவளை உள்ளே அழைத்தேன் வந்தாள். என் அருகில் அமரும்படி சொன்னேன் அமர்ந்தாள். சரி வா தூங்கலாம் என்று கூறி அருகில் படுக்க சொன்னேன் எதுவும் கூறாமல் அமைதியான அதே பார்வை .

அவளின் அந்த பார்வைக்கு எனக்கு இன்றுவரை அர்த்தம் தெரியவில்லை .  ஒரு தலையணையும் போர்வையும் அவளிடம் தந்தேன் அவள் அதை அன்புடன் வாங்கிகொண்டாள் பிறகு என் கட்டிலுக்கு அருகில் தரையில் என்னை பார்த்தவர் ஒரு புறமாக சாய்ந்து படுத்துக்கொண்டு மீண்டும் அதே பார்வை . தூங்கு என்றேன் அமைதியாய் . எதுவும் சொல்லவில்லை அவள் .

மீண்டும் என் அரை கதவு திறந்து அம்மா வந்தாள் நீ இன்னும் தூங்கவில்லையா என்று கேட்டவாறு இது என்ன ஏன் இவற்றை இங்கே தரையில் தள்ளி வைத்திருக்கிறாய் என்றால் அந்த தலையணையையும் போர்வையையும் பார்த்து . எதுவும் கூறாமல் அமைதியாய் திரும்பி படுத்துக்கொண்டேன் . சிந்தனையில் உறங்கியும் போனேன் . காலையில் தோலை பேசியின் சத்தம் கேட்டதும் தான் எழுந்தேன் .

இரவு நடந்தது கனவா இல்லை நிஜமா ஒன்றும் புரியவில்லை . நேராக அடுப்படியில் இருந்த அம்மாவிடம் சென்றேன் , எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிக்கொண்டிருக்கையில் அம்மாவே தொடங்கினாள், இரவு நடந்த அனைத்தையும் அவள் என்னிடம் கேட்டபோது நடந்தது அனைத்தும் உண்மைதான் என்று உணர்ந்தேன் ஆனால் அவள் யார் ? எதற்க்காக என்னிடம் வந்தாள் ? ஏன் ஏதும் பேசாமல் அமைதியாய் சென்றாள் ? இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை இன்றுவரை ....... மீண்டும் அவள் வருவாளா 
 

Sunday, March 20, 2011

நோயும் வந்த வழியும் ............


இப்போது அது ஒரு சிறிய குடும்பம் அப்பா அம்மா வேலு . ஆனால் பத்து பதினைந்து வருடம் முன் இன்னும் இருவர் உடன் இருந்தனர் ஒன்று வேலுவின் அக்காள் , மற்றொன்று வேலுவின் தங்கை ஆனால் இப்போது இருவருமே திருமணம் முடித்து சென்றுவிட்டனர். வேலுவுக்கும் திருமணம் முடிந்து பல வருடம் ஆகிவிட்டது . ஆனால் மனைவியை விட்டு பிரிந்து இருக்கிறான் . 

வேலுவுக்கு இளகிய மனது வறுமையில் ஒருவரை கண்டால் உடனே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் , அவனுக்கு அப்படி ஒன்றும் பெரியாத சம்பாத்தியமும் இல்லை ஆன்னாலும் தனக்கு கிடைத்ததை வைத்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறான் . 

மேலும் ரத்த தானம் செய்வதிலும் ஆர்வம் , ஊரில் எங்கு ரத்த தான முகாம் நடந்தாலும் முதல் ஆளாய் சென்று ரத்தம் வழங்கி விட்டு வருவான் . இப்படி பல நல்ல குணங்களை கொண்ட வேலு தனக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும்படி தன தாயிடம் பல முறை கேட்டிருக்கிறான் . அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்துகொண்டிருக்கிறார்கள் .

அன்று காலையில் இருந்தே வேலுவின் முகம் வாட்டமாக இருந்தது . பல நாள் இப்படி இருந்திருக்கிறது . மனைவியை பிரிந்திருப்பதால் இப்படி இருக்கும் என வேலுவின் தாய் அமைதியாய் இருந்துவிடுவாள் . ஆனால் இப்போதெல்லாம் இவன் அடிக்கடி இப்படி ஆகி விடுகிறானே அது தான் ஏன் என்று தெரியவில்லை வேலுவின் தந்தை இடமும் இதை பற்றி கூறி இருக்கிறாள் சரி விடு அவனை தொந்தரவு செய்யாதே என்று அப்பா சொல்லி விடவே ஐவரும் அமைதியாய் இருந்துவிடுவார் .

சரி இன்று என்னதான் என்று கேட்டு விடுவோம் என்று நினைதா வேலுவின் தாய் என்னப்பா ஏன் ஒரு மாதிரி இருக்க உடம்பு ஏதும் சரி இல்லையா என்றாள்.ஆமாம் மா நேத்துல இருந்தே தல வலி , ராத்திரி சரியா தூங்கல . உடம்பு என்னமோ செய்யுது சென்றான் . இதை கேட்டதும் பதறிப்போன வேலுவின் தாய் அவனை தொட்டு பார்த்தாள். ஐயோ உடம்பு இப்படி நெருப்ப கொதிக்கிதே . வாப்பா மருத்துவ மனைக்கு பொய் வரலாம் என்று அழைத்து சென்றாள்.

வாப்பா வேலு வேலை எல்லாம் எப்படி போயிட்டிருக்கு என்றார் மருத்துவர் வேலுவை கண்டதும் . நல்லா போயடிருக்கு சார் என்றவனை தொடர்ந்த வேலுவின் தாய் இவனுக்கு தான் உடம்புக்கு முடியல அதான் கூட்டிட்டு வந்தேன் என்றாள் . ஓ அப்படியா என்று ஒரு ஆச்சர்யத்துடன் கேட்ட மருத்துவர் என்ன ஆச்சி வேலு . ஓடி ஓடி வேலை செய்வியே உணக்க உடல் நிலை சரி இல்லை என்றார் அவனை பரிசோதித்துகொண்டே .

ஒன்னும் இல்லப்பா வேலு சும்மா ஜுரம் அவ்வளவுதான் , என்று கூறி தேவையான மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார், அவர் சொன்னதுபோலவே அடுத்த நாள் சரி ஆகிவிட்டது . வழக்கம் போல ஓட ஆரம்பித்தான் வேலு .
பின்பொருநாள் வெளியில் செல்லும்போது ரத்த தான முகாமை கண்டான் . வழக்கம் போல உள்ளே சென்று அமர்ந்தான். 

முதலில் ரத்தத்தை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்ட மருத்தவர் ஐந்து நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு வந்தார் . வேலு இப்படி கொஞ்சம் வாங்க என்று தனியாக அழைத்து சென்றவர் அடுத்து கூறியதை கேட்டதும் தலை சுழன்று போனது . ஐயா இல்லை இருக்காது . மீண்டும் ஒருமுறை பாருங்கள் என்றான் வேலு . இல்லை தம்பி உங்களுக்கு எச் ஐ வி இருப்பது உண்மைதான் என்று உறுதியாக கூறினார் . அதிர்ச்சியில் வாயடைத்துபோய் வீட்டிருக்கு சென்று தன தாயிடம் கூறினான் . 


வேலுவின் தாய் இதை நம்ப மறுத்துவிட்டாள், தங்கள் குடும்ப மருத்துவரிடம் அவனை அழைத்து சென்றாள் அவரும் பரிசோதித்து பார்த்துவிட்டு உண்மைதான் என்று கூறினார் . இது எப்படி சாத்தியமாகும் என்று பல் யோசனைகளுடன் இருவரும் வீட்டிற்கு வந்தனர் . அம்மா அவனிடம் பல வினாக்களை வினவினாள் . அம்மாவின் அனைத்து கேள்விகளுக்கும் எதையும் மறைக்காமல் பதில் அளித்த வேலு எதோ யோசனையில் ஆழ்ந்தான் . பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனை மருத்துவரை நோக்கி சென்றான் . அவரிடம் பல சந்தேகங்களை தீர்துகொண்டான் . 

மருத்துவரை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து ஏதேதோ எண்ணங்களுடன் கவலையுடனும்  இருந்த வேலு யோசித்தான் மருத்துவர் கூறியது போல் இது ரத்தத்தினால் தான் தனக்கு வந்திருக்க வேண்டும் . யோசித்தவன் முடிவாக தன் நண்பனிடம் வந்தான் தாங்கள் எப்போதும் அமரும் மரத்தடியில் அமர்ந்து அவனிடம் சில வினாக்களை எழுப்பினான் , உண்மைதான் அன்று தெருவில் பழம் விற்பவனிடம் இருந்து பழம் வாங்கி உண்டதன் விளைவு தான் இது . அவனுக்கு இந்த வியாதி இருந்திருக்கும் அதனால் தான் தனக்கும் வந்துவிட்டது என்று உணர்ந்ததும் பெரும் வேதனைக்கு உள்ளானான் . ஆனால் இதை யாரிடமும் கூற மனமில்லாமல் ஊமையாகிபோனான் . இதன்மூலம் தன்னை அவர்கள் வெறுக்க கூடும் என்பதால் இந்த முடிவுக்கு வந்தான் . இனி எந்த கடவுளை கும்பிட்டு என்ன பயன் ? யாரை நொந்துகொள்வது ? தன் வாழ்நாளை எண்ணிக்கொண்டிருந்தான் வேலு ....

Tuesday, March 15, 2011

மாறிப்போனது காலம் !!!!!!!!!!!

அன்று என் வீட்டின் மொட்டை
 மாடியையும் ஜன்னலையும்
 தேடி ஓடினேன் உன்னையும்
 உன் அழகையும் ரசிப்பதற்காக ......

பார்த்து பார்த்து ரசித்து
இன்பத்தில் மூழ்கி நேரம்
 போனதே தெரியாமல் மங்கிய
 உன் ஒளியில் மயங்கி
கிடந்த காலங்கள் பல ....

ஆனால் இன்றோ நீ என்னை
தேடி இங்கு என் வீட்டின்
ஜன்னலில் எனக்காக காத்து
நிற்கிறாய் காலத்தின் கோலம்
எப்படி ஒரு மாற்றம் ?

நாம் இருவருமே இயற்கையால்
படைக்க பட்டவர்கள் என்னை
 நீயும் உன்னை நானும்
ரசிப்பதில்  வியப்பொன்றுமில்லை ...........

நீயும் நானும் வேறில்லை !!!!!!!!!!!!!!!!

இருக்கும் இடமும் தெரியவில்லை
நல்லவர் யாரும் இங்கில்லை

வாழ்கையின் அர்த்தம் விளங்கவில்லை
வாயிற்கதவுகளும் திறக்கவில்லை

நிறம் மாறும் பச்சோந்தி நான் இல்லை
நீதிக்கு இங்கே இடமில்லை

நேர்மைக்கு இங்கே அர்த்தமில்லை
நேர்காணும் ஏதும் பயனில்லை

கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியவில்லை
கூடி வாழ இங்கே வீடில்லை

உண்ண உணவின்றி தவித்ததில்லை
உறங்கிய நாளென்று எதுவுமில்லை

அன்பாய் பேச ஆளில்லை
அமைதிக்கு இங்கு கோவிலில்லை

சண்டைக்கு யாரும் வந்ததில்லை
சவுக்கடி இதுவரை பட்டதில்லை

வயதின் கோளாறு எனக்கில்லை
வாழ்க்கை வரலாறு எழுதவில்லை

நீதி தேவதைக்கு கண் இல்லை
நிறம் மாறும் பூவும் இங்கில்லை

பள்ளி சென்றது மறக்க வில்லை
படித்தது ஏதும் நினைவில் இல்லை

மண் சோறு இதுவரை உண்டதில்லை
மாரி அம்மன் கோவில் சென்றதில்லை

நட்புக்கு இலக்கணம் யாரும் இல்லை
இங்கே நீயும் நானும் வேறில்லை

Monday, March 14, 2011

இது தான் காதலா ???????

பசியும் இல்லை
பார்வையும் தெரியவில்லை
கால்கள் நடை மறந்தன
வாய் வார்த்தை வரவில்லை
நோயும் இல்லை சோம்பலும்
இல்லை கண்களில் கனவு
விண்ணையும் விண்
மீன்களையும் பார்க்கும்
கண்கள் கண்ணை
பார்க்க மறுக்கும்
காகிதமும் தின்ன
தோன்றும் உன் கை
பட்டால் எல்லாமே மறந்து
போய் ஒலியும் மங்கி போய்
பார்வை அற்றவனாய்
 பாசாங்கு இல்லை
ஓ ............
இதுதான் காதலா ???????

நீ ஒரு காவியம் !!!!!!!!!

ஊர் உறங்கிய பின்னும்
விழித்திருந்தேன் உன்
 நினைவுகளில் என்னை
விரட்டிகொண்டிருந்தாய் நீ ,
பல பாடம் படித்த நான்
உன்னை எழுத்தில் வடிக்க
எண்ணினேன் , நீ கதையாய்
வருவாயா இல்லை
கவிதையாய் வருவாயா ?
விடை கிடைக்காமலே
விடிந்தது காலை , நினைத்தேன்
 மீண்டும் நினைவில்
நீ கதையாய் எழுத்தில்
நீ கவிதையாய் உன்னை
படிக்க இங்கே பலருண்டு
புரிந்துகொண்ட எவரிங்கே ?
 நீ ஒரு காவியம் உன்னை
படைக்க யார் இங்கே வருவார் ?

வாசித்து பார் வாசித்து பார்

பலர் என் எழுத்தை
பாராட்டினார்கள் ஆனால்
என் எழுத்துக்கு காரணமான
 நீ ஏன் எங்கோ அமைதியாய் ?
கேள்விகளை கணையாய்
தொடுக்கிறேன் கண்
முன்னே நீ இல்லையே
பாராட்ட மனமில்லையா
இல்லை பார்த்துவிட்டு
அமைதியா ? எங்கே என்
 கவிதைகளை நீ
வாசிக்காமல் போய்
விடுவாயோ என்று
சில நேரங்களில் அச்சம்
காரணம் சோகமாய் ஒன்றும்
ஆசையாய் ஒன்றும்
கை கொட்டி சிரிக்க ஒன்றும்
கண்ணீர் விட ஒன்றும்
என்று அன்று தனிமையில்
எழுதியதெல்லாம் இன்று
தகவலாய் உன் முன்னே
வாசித்து பார் வாசித்து பார் 

பூந்தோட்டம்

அந்த பூந்தோட்டத்தில் பூ
பறிக்க சென்றேனா இல்லை பூ
 பார்க்க சென்றேனா எனக்கே
தெரிய வில்லை சர சர  என்ற
 ஒலி அருகினில் அவன்
அமைதியாய் முதல் நாள்
அவனை பாக்கிறேன் ,
ஆனாலும் என்றோ பார்த்தது
போல் உணர்கிறேன் , என்னை
 பார்த்த அவன் தன்னை
 தந்து சென்றான் என்னை
தவிக்க விட்டான் அவன்
நினைவுகளில் . மறுநாளும்
பார்த்தேன் ஆளில்லா இடமும்
அசையாமல் நானும்.
வாய் பேச வார்த்தை இல்லாமல்
மொழியே மறந்ததுபோல்
என்னையே மறந்தேன் .
கண்விழித்து பார்த்தேன்
கண்டது கனவு பூவும் இல்லை
தோட்டமும் இல்லை..........

Tuesday, March 8, 2011

என்னையே மறந்தேன் !!


உன்னிடம் ஏதோ சொல்ல 
வரும்போதெல்லாம் மறந்து 
போய் மருகி நிற்கிறேன் ......

உன்னை கண்டதும் உன் 
அருகில் வந்ததும் என்னையே
 நான் மறந்து போகிறேன் ....

பேச வந்த வார்த்தைகள் 
எல்லாம் காற்றோடு
காற்றாய் கலக்க ..........
கல்லாய் சிலையாய்
நான் இங்கே நிற்க
சுவாசமும் மறந்தேன் நான் .... 

சொல்ல வந்த நானும் சோர்ந்து 
போனேன் இங்கே பார்வையும்
 இல்லை பாஷையும் இல்லை .....

நான் நானாக இல்லை
நீ நானாக இருப்பதால்  என்னை 
நானே  மறந்து விட்டேன் .....

நீயே முடிவு செய் ..................................

மனிதனின் குணங்கள் பல வகை 
அதில் உன் குணம் எந்த வகை 
என்பதை நீ உணர்ந்தாலே போதும் .

சில நேரம் குரங்கு குணம் 
சில நேரம் மிருக குணம் 
சில நேரம் அமைதி 
சில நேரம் ஆங்காரம்

உன் கவனம் உன்னிடம் இருந்தால்
எந்த மிருக குணமும் வெளிவராது
சிலர் இதை தானாகவே வளர்க்கிறார்கள்
பலருக்கு இது இயற்கை குணம் 

நன்றி என்னும் குணம் மறந்தால் 
மனிதன் என்றுமே மிருகமாவான் 
நல்லவை செய்பவன் மனிதன் 
தீயதை நினைப்பவன் மிருகம் 

ஆசையை அடக்குபவன் மனிதன் 
ஆசைக்கு அடங்குபவன் மிருகம் 
பழி சொல் கூறுபவன் மிருகம் 
பழி ஏற்று கொள்பவன் மனிதன் 

நீ மனிதனா மிருகமா ?
உன்னை ஆள்வது 
மனிதமா மிருகமா ? 
நீயே முடிவு செய் ...............

நீ யார்

மறு  பிறவி எடுத்து
மீண்டும்  பிறந்திருந்தாலும்

மெளனம் பேசும் மொழி
ஸ்வரங்களின் எண்ணிக்கை
காற்றலைகளின் வருடல்
தமிழ் மொழியின் இனிமை
இறை பேசும் வார்த்தை

மதம் கூறும் போதனை 
கடவுள் நம்பிக்கை
ஏழையின் கெஞ்சல்
பெண்மையின் கொஞ்சல்
பிரிவின் ஏக்கம்
இணைதலின் மயக்கம்
இயற்கையின் எழில்
ஈழத்தமிழனின் இரங்கல்
மழலையின் பார்வை
மானத்தின் வன்மை
நட்பின் விளக்கம் 
பிறப்பின் ரகசியம் 
மறைவின் சோகம்
வாழ்க்கையின் கோட்பாடு
உண்மையின் மேன்மை
பொய்மையின் இழிவு ....

இவை எல்லாம் பற்றி பேச
நீ யார்........

Tuesday, March 1, 2011

பிச்சை எடுக்கும் பச்சை மண் !!!

பிஞ்சு விரல்கள் கொஞ்சும் குரல்
வந்த திசையை நோக்கினால்
பிச்சை எடுக்கும் பச்சை மண் !

கண்ணில் ஏக்கம் கையிலே
தட்டுடன் அம்மா என்றான்
அமைதியாய் நின்றான் !

ஒரு வேளை  உணவிற்கு
வெய்யிலில் திரியும்
இவனுக்குள் வெள்ளை மனது !

வீட்டுகொரு மரம் வளர்
என்று வீண் விவாதம் செய்யும்
வீணர்களே இங்கே !

பசிக்கு உணவு இல்லையே
பார்க்கவில்லையா உங்கள்
கண்கள் இந்த பாவங்களை !

என்று தீரும் இந்த பசி
பட்டினி பிச்சை என்ற
அவல நிலை இங்கே !

தவிக்கும் காதல் !

குழந்தையாய் இருந்தபோது நான்
விட்ட காகித படகு தடுமாறி
கரை ஒதுங்கியது போல
ஒதுக்கி வைக்கப்பட்ட  என் காதல் !
அனைவரும் உறங்கும் அந்த
வேளையிலும் அமைதியாய்
உன் இதயத்தோடு 
 உறவாடும் என் இதயம் !
உன் பெயர் மட்டுமே மந்திரமாய்
எந்நேரமும் என் மனதில்
கவிதை எழுத கூட இங்கே
வார்த்தைகள் இல்லை !
தண்ணீரில் கலந்துவிட்ட
எண்ணையாய் நீயும் இங்கே
தத்தளிக்கும் இதயத்துடன்
தவிக்கும் நானும் !
மண்ணில் கலந்த நீராய்
என்னுள் கலந்த உன்
நினைவுகளை  நம்பிக்கையுடன்
சுமந்திருக்கிறேன் இங்கே !
என்றாவது ஒரு நாள் உன்
இதயத்தின் ஓரம் இளைப்பாற
ஒரு இடம் தருவாய் என்று
தவிக்கிறேன் இங்கே !