ஒரு முறை அடி எடுத்து
வைத்துவிட்டால் அதில்
வேறு எந்த நினைவுகளுக்கும்
இடம் தராதே உன் பாதையில்
கல்லும் வரும் முள்ளும்
வரும் நிம்மதியை தேடி
நீ செல்லாதே நீ எங்கு
சென்றாலும் நிம்மதி
உன்னை தேடி உன்
காலடியில் வரவேண்டும்
தட்டுப்படும் அனைத்தையும்
தாண்டி செல் வெற்றி
உனதே என்ற அடுத்தவரின்
கூக்குரல் மட்டுமே உன்
காதுகளில் ஒலிக்கும்
சோர்ந்து போகாதே
போவதை விட்டுவிடு
வந்ததை காத்துக்கொள்
வந்தது வரம் போனது சாபம்
தட்டுப்படும் அனைத்தையும் தாண்டிச் செல்..அருமை செல்வி...!அத்தனை வரிகளும் அற்புதம்..இருந்தாலும் இறுதியில் வரும் .."வந்தது வரம் , போனது சாபம் "என்ற வரிகள் ....என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...பிரமாதம்...GREAT....
ReplyDelete