உன் சுவாசத்தில்
சுவாசமாய் நான்
உன் உயிரில்
உயிராய் நான்
உன் இதயத்தின்
துடிப்பாய் நான்
உன் கண்களின்
இமையாய் நான்
நீ பேசும் வார்த்தைகளில்
சொற்களாய் நான்
உன் உறக்கத்தில்
கணவாய் நான்
நீ நடக்கும் போது
உன் நிழலாய் நான்
உன் உதட்டில்
புன்னகையாய் நான்
இப்படி உன்னுடைய
எல்லாமாக நான்
இருக்கும்போது
இங்கே நான் எதற்கு
தனியாக நானாய் ??????????
ஒரு கவிதை ஓராயிரம் கேள்விகளை நம் உள்ளத்தில் எழுப்ப முடியுமா..? முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது செல்வியின் இந்த கவிதை...அருமை...
ReplyDelete