Total Pageviews

Sunday, January 30, 2011

நட்பு ...............

தமிழ்,  கலை இருவரும் இணை பிரியா தோழிகள் , இரண்டு வருடங்களாக ஒரே பள்ளியில் பயின்று வருகிறார்கள் தமிழைவிட கலைக்கு ஒரு வயது கூட இருக்கும் , கலைக்கு ஆங்கிலம் சுட்டு போட்டாலும் வராது என்பாள் ஆனால் தமிழோ அப்படி இல்லை பெயர் மட்டுமல்லாமல் தமிழிலும் சுட்டி ஆங்கிலம்,  கணிதம் என்று எல்லா பாடங்களையும் நன்றாக படிப்பாள், இவர்களின் வகுப்பாசிரியருக்கும் சரி மற்ற ஆசிரியர்களுக்கும் தமிழ் என்றால் கொள்ளை பிரியம் .

 காலையில் ஒன்பது மணிக்கு பள்ளி நேரம் என்றால் இவர்கள் இருவரும் எட்டு மணிக்கெல்லாம் அங்கே இருப்பார்கள் படிப்பதற்காக என்று தவறாக நினைத்து விடாதீர்கள் கதை பேசவும் கொஞ்சி விளையாடவும்தான் , தமிழின் குடும்பம் பெரியது ஆனால் கலை வீட்டிற்கு ஒரே பெண் , இருந்தாலும் காலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு பிறகுதான் பள்ளிக்கு வருவாள் .

 இருவரும் பள்ளிக்கு விடுப்பு எடுத்ததே இல்லை என்றால் பார்த்துகொள்ளுங்களேன் , காலையில்தான் இப்படி என்றால் மாலையிலும் இப்படியே வகுப்பு நேரம் முடிந்தது பள்ளி வளாகத்தில் இருக்கும் மாமரத்தடிதான்  இவர்களின் சொர்க்கம் , மணிகணக்கில் அங்கே அமர்ந்து பேசுவார்கள் என்னதான் பெசிகொள்கிரார்கள் என்றே தெரியாது , இவர்களின் சக மாணவியர் என்னடி பேசறீங்க என்று கேட்டால் கூட அது இவர்களின் காதுகளில் விழாது.

தமிழுக்கு அவ்வளவாக தோழிகள் இல்லை யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாள் , ஆனால் கலை அப்படி இல்லை பனிரெண்டாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு மாணவியர் யாராய் இருந்தாலும் நட்புடன் பழகுவாள் , இதனால் இவளை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும், இருந்தாலும் காலையிலும் மாலையிலும் தமிழுடன் மட்டுமே நேரம் செலவழிப்பாள், அவளுடன் தன் உறவினர் பற்றி தன் வீட்டு கதைகளை எல்லாம் கூறுவாள் அவளின் மீது அப்படி ஒரு நம்பிக்கை அதனால் ஆறுதலும் கூட , இதை எல்லாம் தமிழும் தன் தோழிக்காக அமைதியாக அமர்ந்து கேட்டுகொள்வாள், அவளின் மீது அவ்வளவு பாசம்,  பரிவு.

இவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் பள்ளி வாழ்க்கையை விட்டு விலக போகிறார்கள் , இருவருக்கும் மிகுந்த வருத்தம், வேறு வழியில்லை,  பிரிந்து தான் ஆகா வேண்டும் , கடைசி பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகிறது இருவர் கண்களிலும் கண்ணீர் இத்தனை நாள் வாய் கிழிய பேசியவர்களா இவர்கள் என்று கேட்கும் அளவுக்கு அவ்வளவு அமைதி இருவரிடமும் , சக தோழிகள் தங்களுக்குள் தங்கள் வீட்டு விலாசங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்கள் , ஒரு சிலர் சரி பார்க்கலாம் எண்டு கூறி விட்டு சென்று விட்டார்கள் ஆனால்

இவர்கள் இருவரும் இனி எங்கே சென்று பார்க்க போகிறோம் ? இனி வாழ்நாளில் இப்படி ஒரு தோழி மீண்டும் கிடைப்பாளா என்று ஆனால் வேறு வழியில்லாமல் அன்று இருவரும் பிரிந்து சென்றனர் , ஆனால் அவர்களின் நட்பு பிரிந்துவிட வில்லை அடிக்கடி கடிதம் போட்டுக்கொண்டனர்.

கலையின் கடிதம் கண்டவுடன் தமிழுக்கு முதலில் கண்கள் குளமாகும் பின்புதான் படிக்கவே ஆரம்பிப்பாள் , அந்த கடிதத்தில் முதலில் அவள் எழுதுவது நான் நலம் நீ எப்படி இருக்கிறாய் , அம்மா அப்பா தம்பி தங்கை நலமா என்று வழக்கம் போல் விசாரித்த பிறகு இங்கு நான் இன்றும் அதே மாதிரி கொடுமைகளை தான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் , முன்பு எனக்கு நீ ஆறுதலாக இருந்தாய் ஆனால் இன்று நான் தனிமையில் வாடுகிறேன் சோகங்களை கூட பகிர்ந்து கொள்ள ஆளில்லை என்று கண்ணீருடன் தொடரும் அந்த கடிதத்தை படித்து முடிக்கும்போது தமிழ் சிறகொடிந்த கிளியாகிவிடுவாள் , என்ன செய்ய முடியும் தோழிக்காக அழத்தான் முடியும் நம் நிலைமையும் தோழியின் நிலைமையும் இப்படி ஆகி விட்டதே என்று வருந்தாத நாளில்லை .

 இப்படிதான் ஒரு நாள் மதிய உணவு வேளையில் தபால் காரர் அம்மா போஸ்ட் என்றார் தமிழ் அப்போதுதான் உணவில் கை வைத்தாள் எனவே அம்மா நான் வாங்கி வருகிறேன் என்று சென்றவள் கையில் ஒரு கவர் அது எதோ பத்திரிக்கை போல் இருந்தது , இது உனக்கு வந்துள்ளது தமிழ் என்று அதை தமிழிடம் நீட்டினாள், அந்த தபாலை கையில் வாங்கியவளின் கண்களில் கண்ணீர் வழிந்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது , இதை பார்த்த அம்மா என்னடி ஏன் அழற என்ன ஆச்சி என்றாள் பதட்டத்துடன், கேட்டதோடில்லாமல் தமிழின் கையில் இருந்த அந்த கவரியும் வாங்கி பார்த்தாள் அது அவள் தோழி கலையின் திருமண பத்திரிக்கை , சந்தோஷத்துடன் என்ன தமிழ் கலைக்கு திருமணம் நடக்க போகிறது நீ எதற்காக அழுகிறாய் என்றாள் ... தெரியலம்மா அவள் மிகவும் பாவம் ஏனோ தெரியவில்லை கவலையாக இருக்கிறது அழுகை தான் வருகிறது என்றாள் ,
சரி அழறது விட்டுட்டு சாப்பிடு என்றாள் அம்மா , கண்களில் வழிந்த நீர் நின்றபாடில்லை ஆனாலும் சாப்பிட்டு முடித்தாள் தமிழ்.

கலையின் திருமணத்திற்கு இரண்டு நாட்களே உள்ளது என்ன செய்வதென்று புரியவில்லை, கலையை பார்க்க வேண்டும் போல் உள்ளது ஆனால் அவளை நான் எப்படி சந்திப்பது அதுவும் மணப்பெண்ணாக என் தோழி.......  அடுத்தவரின் மனைவியா ? இது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்ன செய்ய போகிறேன் நான் இப்படி யோசித்துகொண்டிருந்தவள் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அம்மா நான் தபால் நிலையம் வரை சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கே மூலையில் இருந்த தன் பெட்டியில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டு சென்றாள், இவள் என்னதான் எடுத்துகொண்டு செல்கிறாள் என்று தெரியாமல் அம்மா அவளை விநோதமாக பார்த்தாள், சென்றவள் சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள் தன் அண்ணனிடம் எதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தாள் என்ன இவள் ஏன் இப்படி இருக்கிறாள் சரி என்னோவோ செய்துட்டு போகட்டும் என்று அம்மா விட்டுவிட்டாள்.

அன்று கலையின் மணநாள் என்ன தமிழ் நீ போகலியா என்றாள் அம்மா இல்லம்மா அண்ணனை போக சொன்னேன் போகமாட்டேன் என்று சொல்லிடுச்சி அதான் நானும் போகலே பணம் அனுப்பிட்டேன் என்றாள் , ஒ ... இவள் தபால் நிலையம் சென்றது இதற்க்கு தானா என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள் அம்மா.

ஒரு மாதம் கழித்து கலையிடம் இருந்து கடிதம் வந்தது , தமிழுக்கு மிகுந்த சந்தோஷம் பிரித்து படிக்க ஆரம்பித்தாள் வழக்கம் போல விசாரிப்புகள் தொடர்ந்தது அடுத்து வந்த வரிகள் அவளை சோகத்தில் ஆழ்த்தியது இங்கு ஏன் மாமியார் வீட்டில் என்னை மிகவும் கொடுமை படுத்துகிறார்கள் , ஒரே ஒரு நாத்தி அவள் வைத்ததுதான் இங்கே சட்டம் எல்லோரும் அவள் பேச்சுக்கு மறு பேச்சு பேசுவதில்லை , என்னை அவள் மிகவும் மோசமாக நடத்துகிறாள், இவர்கள் யாருமே இதை கண்டு கொள்ளவதில்லை என் கணவர் மட்டும்தான் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறார் இதை எல்லாம் கண்டு கொள்ளாதே வருத்தபடாதே என்று கூறுவார் அது கொஞ்சம்  நிம்மதி என்று கண்ணீருடன் அந்த கடிதத்தை முடித்திருந்தாள்.

 அட கடவுளே என்ன கொடுமை இது அம்மா வீட்டில் தான் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாள் என்றாள் இங்குமா ? இவளின் கஷ்டங்களுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று கடவுளை நொந்துகொண்டாள் தமிழ் , வேறு என்ன செய்ய முடியும் ? பதில் கடிதம் எழுத எடுத்தவள் கலையின் கடிதத்தின் கடைசி வரிகள் அவளை யோசித்து எழுத வைத்தது , அதில் அவள் நீ எனக்கு பதில் எழுதும்போது எப்போதும் போல் எழுது இதை பற்றி ஏதும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுகொண்டாள் ஆகவே இந்த கடிதத்தை நாம் மிகவும் கவனமாக எழுத வேண்டும் , ஒற்றை வார்த்தை கூட அவளின் நிலை குறித்து ஆறுதலாக எழுதிவிட கூடாது என்று கவனமாக இருந்தாள் , ஒரு வழியாக கடிதத்தை முடித்தவள் மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தாள் எங்கேனும் தவறுதலாக ஒரு வார்த்தை கூட இருக்க கூடாது என்பதால் , நல்ல  வேலையாக அப்படி ஏதும் எழுதவில்லை , கலை குறிப்பிட்டிருந்த தன் மாமனார் வீட்டின் முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைத்தாள்.

அடுத்த இரண்டு நாட்களில் தமிழுக்கு பதில் கடிதமும் வந்தது ஆனால் அதில் தன் மாமியார் இறந்து விட்டதாக எழுதி இருந்தாள், அப்பாடா ஒழிந்தது ஒரு தலை வலி இனி கலை கொஞ்சம் நிம்மதியாக இருப்பாள் என்று நினைத்து நினைத்தாள் தமிழ் ஆனால் அவள் நினைத்தது தவறு என்று கலையின் அடுத்த கடிதத்தின் மூலம் தெரிந்தது, அவர்களின் ஏச்சும் பேச்சும் இன்னும் அதிகமானதே ஒழிய குறைய வில்லை, அட ஏன் இவளுக்கு மட்டும் இப்படி ஒரு சோதனை என்று வேதனைப்பட்டாள் தமிழ்.

இதற்கிடையில் தமிழுக்கு மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவளும் வெளி ஊருக்கு சென்று விட்டாள், கலையிடம் இருந்து கடிதம் வந்ததா இல்லையா என்பது கூட தெரியாமல் போனது , ஒரு முறை தமிழுக்கு இரண்டு நாட்கள் விடுப்பு கிடைத்தது சரி அம்மா அப்பாவை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள், அவள் அங்கு தன் தோழியுடன் அரை எடுத்து தங்கி இருந்தாள் அந்த இடத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு முப்பது நிமிடம் நடக்க வேண்டும் வெயில் காலம் வேறு, வந்து பேருந்தில் அமர்ந்தவள் தன் கையில் வைத்திருந்த தண்ணீரை குடித்தாள், தன்னை யாரோ முதுகில் தட்டவே யாரு என்று திரும்பியவள் அடுத்த வினாடி மயங்கி விழுந்தாள் பேருந்தில்.

அருகில் இருந்தவர்கள் செய்வதறியாது தவித்து பிறகு இவள் கையில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்பி விட்டார்கள், மெதுவாக கண்ணை திறந்தவள் மீண்டும் தன்னை அறியாமல் கண்களை மூட போனாள் அதற்குள் கலை அவளிடம் ஏய் என்ன நீ ஏன் இப்படி ? வா கிழே போகலாம் என்று தமிழை பேருந்திலிருந்து கிழே இறக்கி கொண்டாள், அவள் கையில் ஒரு குழந்தை , அங்கிருந்து அவளை அழைத்து கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்து இடதுபுறமாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள், ஒன்றுமே புரியாதவளாய் இது என்ன நான் வந்த வழியிலேயே என்னை அழைத்து செல்கிறாளே என்று நினைதுக்கொண்டிருக்கும்போதே ஒரு நான்கு கட்டிடங்கள் தள்ளி வலதுபுறம் திரும்பி அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்றாள்.

தமிழுக்கு ஒன்றுமே விளங்க வில்லை என்ன நடக்கிறது என்று புரியாமல் அங்கு அவளுடன் அமர்ந்திருந்தாள், கலை அவளிடம் ஏன் இப்படி ? சரி நீ எப்படி இங்கே ? எங்கே போயிட்டிருக்க? என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள், நான் இங்கேதான் படிச்சிட்டு இருக்கேன் , இன்னிக்கும் நாளைக்கும் விடுமுறை அதான் வீட்டுக்கு போகலாம்னு கிளம்பிட்டிருந்தேன் என்று தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள், இன்னும் அவளால் கலையை சந்தித்ததை நம்பவே முடிய வில்லை, அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவேயில்லை.

சரி நீ எப்படி இங்கே இது உன்னுடைய குழந்தையா என்றாள் கலையின் கையில் இருந்த அந்த குழந்தையை பார்த்து, உண்டனே கலை அந்த குழந்தையை தமிழின் கையில் கொடுத்து ஆமாம் இது என்னுடைய குழந்தைதான் என்றாள் , தமிழ் அந்த குழந்தையை சந்தோஷமாக கையில் வாங்கிக்கொண்டாள் இருவரும் அங்கே ஓரமாக இருந்து நாற்காலியில் அமர்ந்தார்கள்  ஆணா பெண்ணா என்றாள் தமிழ் ஆண் குழந்தைதான் பெயர் கமல் என்றாள் கலை,  கமல் என்று ஆசையாய் சொல்லி பார்த்தாள் தமிழ் அந்த குழந்தையை பார்த்து, அது அமைதியாக உறங்கிக்கொண்டிருதது, தமிழுக்கு ரொம்ப சந்தோஷம், கலையை பிரிந்த அன்று மீண்டும் சந்திப்போமா என்று நினைத்து கவலை பட்டவள் இப்போது மீண்டும் அவளுடன் நம்பவே முடியவில்லை ஆனாலும் உண்மை.

கலை கொஞ்சம் குண்டாகி இருந்தாள் தமிழ் என்னவோ அப்படியே தான் இருந்தாள் , என்னடி இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டே என்றாள் கலையை பார்த்து , ஏய் கல்யாணம் ஆனா எல்லோரும் இப்படி தான் மாறிடுவாங்க நீயும் ஒரு நாள் இப்படி ஆகபோரே பாரு என்றாள் சிரித்துக்கொண்டே சவால் விடும் தோரணையில் , இருவரும் சந்தோஷமாக நேரம் செலவழித்து மருத்துவரை பார்த்த பின்பு பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு  ஒரு நாள் கலையிடம் இருந்து கடிதம் வந்தது அதில் தன் கணவர் வேறு ஊருக்கு மாற்றமாகி சென்று விட்டதாகவும் இங்கு  நிலைமை இன்னும் மோசமாகி விட்டதாகவும் எழுதி இருந்தாள் , தமிழுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை , ச்சே திருமண வாழ்க்கை இப்படிதான் இருக்குமோ , இல்லை கலைக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா ? முதல் கடிதத்திலேயே இதை பற்றி ஒரு வரி கூட எழுத வேண்டாம் என்று சொல்லி இருந்தாள் அல்லவா அதனால் இவளால் ஒன்றும் எழுத முடியவில்லை, அடுத்த ஒரு வருடத்தில் கலையின் மாமனாரும் இறந்து விட்டாராம் பிறகு அவளும் அவள் கணவரும் வேறு ஒரு ஊருக்கு குடி சென்றுவிட்டனர், அங்கு அமைதியாக சந்தோஷமாக காலம் ஓடியது.

இரண்டு மூன்று வருடங்கள் அந்த ஊரில் இருந்தார்கள் என்பது கடிதத்தின் மூலம் தெரிந்துகொண்டாள், பிறகு சொந்த ஊருக்கே திரும்ப வந்து விட்டார்கள் , இடையில் கலையின் மைத்துனர் நாத்தனார் என்று மூன்று பேருக்கு திருமணம் முடிந்திருந்தது , கடைசி மைத்துனரை கவனித்துக்கொள்ள ஆள் இல்லையென்று இவர்கள் இதே ஊருக்கு மாற்றலாகி வந்து விட்டார்கள் என்று சொன்னாள், இப்போது பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை என்றாலும் சில நேரங்களில் இவர்கள் ஒன்றாக கூடும் பண்டிகை காலங்கள் திருமணம் திருவிழா போன்ற நாட்களில் எதாவது ஒரு விதத்தில் சண்டைகள் வந்து விடுமாம், இப்போ கலை இவற்றை பழகி விட்டதால் சமாளிக்கவும் கற்றுக்கொண்டாள், இது ஓரளவுக்கு ஆறுதலான விஷயம்.

இப்போது அவளிடம் தொலை பேசி அலை பேசி என்று இந்த காலத்திற்கு ஏற்ற எல்லா வசதிகளும் இருக்கவே இவர்கள் நிறைய பேசிக்கொள்கிறார்கள் , தமிழும் கலையின் நினைவு வரும்போதெல்லாம் அவளுக்கு தொலை பேசியில் அழைத்து பேசி விடுகிறாள் , ஒரு முறை கலை தமிழிடம் ஏண்டி நீ இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லையா என்றாள்அடி போடி இவளே திருமணம் செய்து கொண்டு நீ படும் பாடு போதாதா நான் வேறு படவேண்டுமா ? உனக்கு ஏண்டி இப்படி ஒரு எண்ணம் ? என்று கலையிடம் சாதாரணமாக கேட்டாலும் அவளின் நிலை குறித்து இவளுக்கு வருத்தமே , இதை கேட்ட கலை எல்லோருக்கும் வாழ்க்கை இப்படி அமையாதுடி உன் குணத்திற்கு இப்படி எல்லாம் நடக்காது நீ நல்லாதான் இருப்பே என்று ஆறுதல் கூறினாள், ஆனாலும் ஐயோ இவளுக்கும் தன் நிலை ஏற்படக்கூடாது என்று வேண்டிக்கொண்டாள் மனதிற்குள்.

இவர்களின் நட்பு இப்படியே தொடர்ந்து கொண்டு....... இருக்கிறது இன்னும் தொடரும்............

Saturday, January 29, 2011

என் கனவில்

எதிர்பார்க்காத போது
எதிரில் வந்து நின்றாய்
ஏங்கி தவிக்கையில் எட்ட
நின்று வேடிக்கை பார்க்கிறாய்
அயர்ச்சியாய்  இருந்தாலும்
கவர்ச்சியான உன் கண்கள்
உன் பிஞ்சு  விரல்களுக்குள் 
என் கை......  விடவில்லை நீ
விழித்து பார்த்தேன் பகலில்லை
புதிர்போடும் உன் புன்னகையை
புரிந்து கொண்டும் பயனில்லை.
மந்திரத்தால் கட்டி போட்டு
மறைந்து நின்றால் என்ன பயன் ?

Friday, January 28, 2011

விதியின் கையில் நான் .....

காலங்கள் ஓடிக்கொண்டே இருந்தாலும்
மனதில் கவலைகள் குறைவில்லை
ஏக்கத்தில் விட்ட மூச்சு இன்று ஊருக்கே காற்று
காற்றினில் உன் வாசம் வீசும் போது
சுவாசிக்க நினைத்து சுதாரித்து கொண்டேன்
விஷ வாயுவும் அங்கே கலந்து வந்ததால் ,
காற்றை கடிந்து கொள்ளவா ?
 இல்லை காதலை தேடி செல்லவா ?
தூய்மையான உன் அன்பில்
பொய் சேர்ந்தது எப்போது ?
புறக்கணிக்க நினைத்தாலும்
அரவணைத்து நீதானே ....
மறக்க வில்லை மனம்
மன்றாடுவேன் தினம் ....
நீ தேடும்போது நான்
இல்லை உன்னிடம்....
உலகம் அழியும்போது
உன் நினைவு என்னிடம்...
விளையாட்டு பிள்ளை நீ....
விதியின் கையில் நான் .....

உறவாட வா !

புண்பட்ட மனதில் போராட்டம் இல்லை
அமைதியாய் கேட்கிறேன் அழைத்துசெல் என்னை
அழுவதற்கு கண்ணீர் இல்லை வற்றிவிட்டது கடலும்
குளம் நீரை கொண்டுவந்தால் குறைந்து போகும் என் தாகம்
பசி அறியா பகலவனாய் இருந்தாலும் கேட்கிறேன்
இரவிலும் உன் அருகினில் இடம் வேண்டும் ,
உருகினாலும் பரவாயில்லை உன் உறவால் பயமில்லை.....
 

உயிர் எடுக்கும் தோழன் !

உன் சிரிப்பும் பேச்சும் என்னை மட்டுமா மயக்கியது ?
உன் அன்பினால் என்னை மயக்கினாய் ....
இன்று நான் நானாக இல்லை .......
ஊரில் இத்தனை பேர் இருக்க ..........
என்னை ஏன் குறி வைத்தாய் ?
உன் நட்பு வேண்டினேன் கொடுத்தாய் ,
உயிர் கொடுப்பான் தோழன் என்றிருந்தேன்
ஆனால் நீயோ என்னை முழுவதும் உன்
நினைவுகளால் ஆக்கிரமித்து இன்று என்
உயிர் எடுக்கிறாய் .... நியாயமா இது ?

மூடர்கள்

மாலதி இரு குழந்தைகளுக்கு தாய் , கணவனை பிரிந்தவள் , இதனால் அவள் அவ்வளவாக வெளியில் செல்வது இல்லை யாரிடமும் பேசுவது இல்லை , ஆனால் சிறிது காலமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறாள் , குழந்தைகளை காப்பாற்றி ஆகா வேண்டுமே , இப்போது படிப்பிற்கு ஆகும் செலவு அப்பப்பா !

 ஒரு நாள் அவள்  கிளம்பிக்கொண்டு இருக்கையில் அடுத்த வீட்டு சரசு இவளிடம் பேச்சு கொடுத்தாள் .... உன்னை பார்க்கவே பாவமாக இருக்கிறது மாலதி நீ எப்படி இருந்தாய் உன் குழந்தைகள் எவ்வளவு செல்வாக்காக வளர்ந்தார்கள் என்றெல்லாம் கூறினாள் இதை கேட்டதும்  மாலதி சற்று நெகிழ்ந்தே போனாள்... மேலும் சரசு இவளிடம் பக்கத்து ஊரில் இருக்கும் அம்மன் கோவில் உனக்கு தெரயுமல்லவா என்றாள் ஆமாம் கேள்வி பட்டிருக்கிறேன் என்றாள் மாலதி , உடனே சரசு அங்கே வெள்ளிகிழமைகளில் ஒரு சாமியார் வருகிறார் அங்கு வருபவர்களின் பெயரை சொல்லி அழைத்து குறைகளையும் தீர்த்து வைக்கிறார் , அவரை சந்தித்தால் உன் கஷ்டம் சிறிது குறையும் உன் கணவரும் கிடைத்து விடுவார் என்றாள் இதை கேட்டதும்  மாலதிக்கு கொஞ்சம் சந்தோசம் ஆனாலும் சிறிது சந்தேகத்துடன் இது உண்மையா என்றாள்,  ஆமாம் நீ வா ஒரு நாள் பொய் வருவோம் என்றாள்.

 ஒரு வெள்ளிகிழமை அந்த சாமியாரை பார்க்க சென்றாள் , சரசு சொன்னதுபோல் அவரும் பூஜையின் பொது தன்னை பெயர் சொல்லி அழைத்தார் உனக்கு இன்றிலிருந்து நல்ல காலம் பிறந்து விட்டது மகளே இனி உனக்கு எந்த கஷ்டமும் நேராது என்றார் மாலதிக்கு ஆறுதலாக இருந்தது , பூஜை முடிந்ததும் சிறிது நேரம் இரு உனக்கான பூஜை முறைகளை சொல்லுகிறேன் என்றார் சாமியார் , சொன்னபடியே பூஜை முடிந்ததும் சாமியார் மகளே நீ நாற்பது நாட்கள் கடும் விரதம் இருக்க வேண்டும் , அப்படி இருக்கும்போது இடையில் வாரம் ஒரு முறை என்னை வந்து சந்திக்க வேண்டும் வரும்போது ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கொஞ்சம் கற்பூரம் எலுமிச்சை பழம் என்று  ஒரு நீளமான பட்டியல் கொடுத்தார் ...... சரி என்று  கூறிவிட்டு பக்தியுடன் அங்கிருந்து நகர்ந்தாள்,

போகும்போது ஒரு நிம்மதி எப்படியும் தன் கணவர் வந்து சேர்ந்துவிடுவார் முன் போலவே குழந்தைகளும் நாமும் சந்தோஷமாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டே வீடு வந்ததும் முதல் வேலையாக பூஜை விரதத்திற்கு தேவையானவற்றை தயார் செய்தாள். ஒவ்வொரு வாரமும் சாமியார் கூறியது போலவே அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு போய் அவரை சந்தித்து விட்டு வந்தாள் நாற்ப்பது நாட்களும் முடிந்து விட்டது இரண்டு மாதம் ...... இன்று வரை தனக்கு ஏதும் நல்லது நடக்கவும் இல்லை தன் கணவரும் வீடு வந்து சேரவில்லை மாலதிக்கு உடல் நிலை வேறு  சரியில்லை.

படுக்கையில் கிடந்தவளின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது , இந்த இரண்டு மாத காலமும் இந்த சாமியார் சொன்னதை கேட்டு இப்படி பணம் செலவழித்து , நம் உடல் நிலையம் கெட்டுபோய் இப்போது கடனாளியாகவும் ஆகிவிட்டோமே , இனி என்ன செய்ய போகிறோம் .... இப்படி விரதம் பூஜை என்று நேரத்தையும் பணத்தையும் செலவழித்ததற்கு பதில் அந்த நேரத்தில் கணவரை நாமே சென்று எங்காவது தேடி இருக்கலாம் , இல்லையேல் அந்த பணத்தை வைத்து ஏதாவது சிறு கைத்தொழில் செய்து இருக்கலாம் , இப்படி முடியாமல் படுத்திருக்கிறோம் இப்போது வந்து பார்த்தாளா இந்த சரசு ? .... இனிமேல் அவளிடம் பேசவே கூடாது, பேசினாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பகூடாது மக்களிடம் மூட நம்ம்பிக்கை இருக்கும் வரை இது போன்ற சரசுவும் சாமியார்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் இனிமேல் இது போன்ற மூடர்களிடம் சவகாசம் வைத்து கொள்ளவே கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்தாள் மாலதி ............ 

Wednesday, January 26, 2011

என் கேள்வி ........????????????????

நீ என்ன என்னை பாழடைந்த
கிணறு என்று நினைத்து விட்டாயா ? 
இல்லை நான் பண்பட்ட நிலம்
பயன்படுத்திகொள்.......
என் பாதையில் தடைபட்ட
கல்லாய் உன்னை விட்டு செல்ல
முடியாது சக பயணியாக
உன்னுடன் பயணம்
செய்ய விரும்புகிறேன்
கைகோர்த்துக்கொள் ......
கோரிக்கை மனு ஏதாவது  கொடுக்க
வேண்டுமா இல்லை
 கோவிலில் குறி கேட்க வேண்டுமா ?

சமூக விரோதிகள்

அன்று அரிதாக கடைத்தெருவுக்கு சென்றேன் போகுன்போது வழியில் சிலர் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள் இவர்கள் எல்லாம் ஏன் இப்படி தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு விளங்க வில்லை , அங்கே கடைக்கு அருகில் ஒரு சிறு மக்கள் கூட்டம் அவர்களில் ஒரு சிலரின் முகத்தில் பீதி ,  என்ன என்று பார்க்கலாம் என்று அருகே சென்று சிலரை விலக்கி விட்டு நடுவே எட்டி பார்த்தேன் அடடா என்ன கொடுமை இது .......? கடவுளே ........ அங்கே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் ஆனால் இவர்களோ அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு.....

என்ன மனிதர்கள் இவர்கள் இப்படியா வேடிக்கை பார்பார்கள் ? இறக்கம் என்பது இவர்களிடம் மருந்துக்கு கூட இல்லையா என்ன ? இவர்களின்  குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டாலும் இப்படிதான் வேடிக்கை பார்பார்களா என்ன? எனக்கு கோபம் தலைக்கேறியது அங்கிருந்தவர்களை நோக்கி ஏங்க என்ன இப்படி நின்று வேடிக்கை பார்துட்டிருக்கீங்க ? யாரவது  இவரை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூடாதா என்றேன்...... சிலர் நேரிடையாகவே நமக்கேன் தம்பி வம்பு என்றார்கள் ... அதில் ஒருவர் மட்டும் என்னிடம் ஏன் தம்பி இவரை இக்கதிக்கு ஆளாக்கியது யார் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் நீங்கள் இப்போது இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள் என்றார் என்னை பார்த்து , யாராய் இருந்தால் என்ன சார் ? இவர் ரத்த வெள்ளத்தில் இருக்கும்போது இவரை காப்பாற்ற வேண்டியது நமது கடமையல்லவா என்றேன் கோபத்துடன் ....  அங்கே இவரை நீங்கள் கொண்டு சென்றால் கூட வந்து கொன்றுவிடுவார்கள் தம்பி பிறகு இவரின் பிணம் கூட இவர்களின் குடும்பத்தார்க்கு கிடைக்காது  என்றார் சற்றே வருத்ததுடன் , இவர் இங்கேயே கிடந்தாலாவது இவரின் பிணமாவது குடும்பத்தார்க்கு கிடைக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் நாங்கள் யாரும் இவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பதையும் விளக்கினார் எனக்கு

 .....  இவர்கள் கூறுவது ஒரு விதத்தில் நியாயம் தான் .... அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்று நடந்தேன் அருகில் இருந்த தொலைபேசியை நோக்கி ... அவசர உதவிக்கும் , காவல் நிலையத்திற்கும் அறிவித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் நிம்மதியாக......  ஆனாலும் என் கோபம் இன்னும் அடங்க வில்லை .... இவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த அரக்கன் யார் ? இவர்களிடம் இந்த மனிதர்கள் இப்படி பயம் கொள்வது ஏன் ? எல்லோருமே பயந்து ஓடினால் அவர்களை திருத்துவது யார் ? இன்னும் எத்தனை பேர் இப்படி சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதக்ககூடுமோ ...... இனி இந்த ஊரும் நாடும் என்ன ஆகும் ......  இந்த சமூக விரோதிகளை அழிக்க யார் வருவார்கள் ?  இன்னும் சில கேள்விகள்  என் மனதில் ......