Total Pageviews

Friday, January 28, 2011

மூடர்கள்

மாலதி இரு குழந்தைகளுக்கு தாய் , கணவனை பிரிந்தவள் , இதனால் அவள் அவ்வளவாக வெளியில் செல்வது இல்லை யாரிடமும் பேசுவது இல்லை , ஆனால் சிறிது காலமாக வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறாள் , குழந்தைகளை காப்பாற்றி ஆகா வேண்டுமே , இப்போது படிப்பிற்கு ஆகும் செலவு அப்பப்பா !

 ஒரு நாள் அவள்  கிளம்பிக்கொண்டு இருக்கையில் அடுத்த வீட்டு சரசு இவளிடம் பேச்சு கொடுத்தாள் .... உன்னை பார்க்கவே பாவமாக இருக்கிறது மாலதி நீ எப்படி இருந்தாய் உன் குழந்தைகள் எவ்வளவு செல்வாக்காக வளர்ந்தார்கள் என்றெல்லாம் கூறினாள் இதை கேட்டதும்  மாலதி சற்று நெகிழ்ந்தே போனாள்... மேலும் சரசு இவளிடம் பக்கத்து ஊரில் இருக்கும் அம்மன் கோவில் உனக்கு தெரயுமல்லவா என்றாள் ஆமாம் கேள்வி பட்டிருக்கிறேன் என்றாள் மாலதி , உடனே சரசு அங்கே வெள்ளிகிழமைகளில் ஒரு சாமியார் வருகிறார் அங்கு வருபவர்களின் பெயரை சொல்லி அழைத்து குறைகளையும் தீர்த்து வைக்கிறார் , அவரை சந்தித்தால் உன் கஷ்டம் சிறிது குறையும் உன் கணவரும் கிடைத்து விடுவார் என்றாள் இதை கேட்டதும்  மாலதிக்கு கொஞ்சம் சந்தோசம் ஆனாலும் சிறிது சந்தேகத்துடன் இது உண்மையா என்றாள்,  ஆமாம் நீ வா ஒரு நாள் பொய் வருவோம் என்றாள்.

 ஒரு வெள்ளிகிழமை அந்த சாமியாரை பார்க்க சென்றாள் , சரசு சொன்னதுபோல் அவரும் பூஜையின் பொது தன்னை பெயர் சொல்லி அழைத்தார் உனக்கு இன்றிலிருந்து நல்ல காலம் பிறந்து விட்டது மகளே இனி உனக்கு எந்த கஷ்டமும் நேராது என்றார் மாலதிக்கு ஆறுதலாக இருந்தது , பூஜை முடிந்ததும் சிறிது நேரம் இரு உனக்கான பூஜை முறைகளை சொல்லுகிறேன் என்றார் சாமியார் , சொன்னபடியே பூஜை முடிந்ததும் சாமியார் மகளே நீ நாற்பது நாட்கள் கடும் விரதம் இருக்க வேண்டும் , அப்படி இருக்கும்போது இடையில் வாரம் ஒரு முறை என்னை வந்து சந்திக்க வேண்டும் வரும்போது ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கொஞ்சம் கற்பூரம் எலுமிச்சை பழம் என்று  ஒரு நீளமான பட்டியல் கொடுத்தார் ...... சரி என்று  கூறிவிட்டு பக்தியுடன் அங்கிருந்து நகர்ந்தாள்,

போகும்போது ஒரு நிம்மதி எப்படியும் தன் கணவர் வந்து சேர்ந்துவிடுவார் முன் போலவே குழந்தைகளும் நாமும் சந்தோஷமாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டே வீடு வந்ததும் முதல் வேலையாக பூஜை விரதத்திற்கு தேவையானவற்றை தயார் செய்தாள். ஒவ்வொரு வாரமும் சாமியார் கூறியது போலவே அந்த பொருட்களை எடுத்துக்கொண்டு போய் அவரை சந்தித்து விட்டு வந்தாள் நாற்ப்பது நாட்களும் முடிந்து விட்டது இரண்டு மாதம் ...... இன்று வரை தனக்கு ஏதும் நல்லது நடக்கவும் இல்லை தன் கணவரும் வீடு வந்து சேரவில்லை மாலதிக்கு உடல் நிலை வேறு  சரியில்லை.

படுக்கையில் கிடந்தவளின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது , இந்த இரண்டு மாத காலமும் இந்த சாமியார் சொன்னதை கேட்டு இப்படி பணம் செலவழித்து , நம் உடல் நிலையம் கெட்டுபோய் இப்போது கடனாளியாகவும் ஆகிவிட்டோமே , இனி என்ன செய்ய போகிறோம் .... இப்படி விரதம் பூஜை என்று நேரத்தையும் பணத்தையும் செலவழித்ததற்கு பதில் அந்த நேரத்தில் கணவரை நாமே சென்று எங்காவது தேடி இருக்கலாம் , இல்லையேல் அந்த பணத்தை வைத்து ஏதாவது சிறு கைத்தொழில் செய்து இருக்கலாம் , இப்படி முடியாமல் படுத்திருக்கிறோம் இப்போது வந்து பார்த்தாளா இந்த சரசு ? .... இனிமேல் அவளிடம் பேசவே கூடாது, பேசினாலும் இது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பகூடாது மக்களிடம் மூட நம்ம்பிக்கை இருக்கும் வரை இது போன்ற சரசுவும் சாமியார்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் இனிமேல் இது போன்ற மூடர்களிடம் சவகாசம் வைத்து கொள்ளவே கூடாது என்று ஒரு முடிவுக்கு வந்தாள் மாலதி ............ 

No comments:

Post a Comment