Total Pageviews

Wednesday, January 26, 2011

சமூக விரோதிகள்

அன்று அரிதாக கடைத்தெருவுக்கு சென்றேன் போகுன்போது வழியில் சிலர் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள் இவர்கள் எல்லாம் ஏன் இப்படி தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு விளங்க வில்லை , அங்கே கடைக்கு அருகில் ஒரு சிறு மக்கள் கூட்டம் அவர்களில் ஒரு சிலரின் முகத்தில் பீதி ,  என்ன என்று பார்க்கலாம் என்று அருகே சென்று சிலரை விலக்கி விட்டு நடுவே எட்டி பார்த்தேன் அடடா என்ன கொடுமை இது .......? கடவுளே ........ அங்கே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் ஆனால் இவர்களோ அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு.....

என்ன மனிதர்கள் இவர்கள் இப்படியா வேடிக்கை பார்பார்கள் ? இறக்கம் என்பது இவர்களிடம் மருந்துக்கு கூட இல்லையா என்ன ? இவர்களின்  குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டாலும் இப்படிதான் வேடிக்கை பார்பார்களா என்ன? எனக்கு கோபம் தலைக்கேறியது அங்கிருந்தவர்களை நோக்கி ஏங்க என்ன இப்படி நின்று வேடிக்கை பார்துட்டிருக்கீங்க ? யாரவது  இவரை ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூடாதா என்றேன்...... சிலர் நேரிடையாகவே நமக்கேன் தம்பி வம்பு என்றார்கள் ... அதில் ஒருவர் மட்டும் என்னிடம் ஏன் தம்பி இவரை இக்கதிக்கு ஆளாக்கியது யார் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் நீங்கள் இப்போது இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள் என்றார் என்னை பார்த்து , யாராய் இருந்தால் என்ன சார் ? இவர் ரத்த வெள்ளத்தில் இருக்கும்போது இவரை காப்பாற்ற வேண்டியது நமது கடமையல்லவா என்றேன் கோபத்துடன் ....  அங்கே இவரை நீங்கள் கொண்டு சென்றால் கூட வந்து கொன்றுவிடுவார்கள் தம்பி பிறகு இவரின் பிணம் கூட இவர்களின் குடும்பத்தார்க்கு கிடைக்காது  என்றார் சற்றே வருத்ததுடன் , இவர் இங்கேயே கிடந்தாலாவது இவரின் பிணமாவது குடும்பத்தார்க்கு கிடைக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் நாங்கள் யாரும் இவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பதையும் விளக்கினார் எனக்கு

 .....  இவர்கள் கூறுவது ஒரு விதத்தில் நியாயம் தான் .... அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்று நடந்தேன் அருகில் இருந்த தொலைபேசியை நோக்கி ... அவசர உதவிக்கும் , காவல் நிலையத்திற்கும் அறிவித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன் நிம்மதியாக......  ஆனாலும் என் கோபம் இன்னும் அடங்க வில்லை .... இவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்த அரக்கன் யார் ? இவர்களிடம் இந்த மனிதர்கள் இப்படி பயம் கொள்வது ஏன் ? எல்லோருமே பயந்து ஓடினால் அவர்களை திருத்துவது யார் ? இன்னும் எத்தனை பேர் இப்படி சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதக்ககூடுமோ ...... இனி இந்த ஊரும் நாடும் என்ன ஆகும் ......  இந்த சமூக விரோதிகளை அழிக்க யார் வருவார்கள் ?  இன்னும் சில கேள்விகள்  என் மனதில் ...... 

No comments:

Post a Comment