அன்று காலை வீடே பரபரப்பாக இருந்தது , மாமா வர போகிறாராம் , வரட்டுமே என்றுதானே நினைக்கிறீர்கள் ? இதில் விசேஷம் இருக்கிறது 10 வருடம் கழித்து அவர் வருவது தான் இந்த பரபரப்பிற்கு காரணம் , அம்மா அடுப்படியில் எதோ விதம் விதமாய் சமைதுக்கொண்டிருந்தாள் உடன் பிறந்தவராயிற்றே , நிச்சயம் இருக்கும் , அப்பா செய்தி தாளை வைத்துகொண்டு இருந்தாரே தவிர அவர் முகத்தில் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது , தாத்தா இறந்த பிறகு சண்டை போட்டுகொண்டவர்கள்தான் பிறகு எந்த தொடர்பும் இல்லை , ஆனால் இப்போது அவரின் மூத்த மகன் திருமணத்திற்காக அழைக்க வருகிறார்கள் சரி வரட்டும் என்று இருந்தார் அப்பா , அம்மாவுக்காக அமைதியாக இருந்தார் .
கார் சத்தம் கேட்டதும் அம்மாவின் குரல் அங்கே பாருங்க வந்துட்டாங்க போலிருக்கு ...... என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கார் வாசலில் வந்து நின்று அதிலிருந்து மாமா மாமி மாமியின் அக்கா அவரின் மகன் ஒரு குழந்தை என்று ஒரவர் பின் ஒருவராக இறங்கினார்கள் , இதை பார்த்த எனக்கே சந்தோஷம் என்றால் அம்மா எப்படி சந்தொஷபடுவாள் , ஆம் அவளே வந்துவிட்டாள் வாங்க அண்ணா வாங்க அண்ணி…. ம்.... வாங்க வாங்க என்று அழைத்துக்கொண்டே உள்ளே செல்ல இவர்கள் என்னை நீ எப்படி இருக்க என்று கேட்டு கொண்டே அம்மாவை பின்தொடர்ந்தார்கள் , அப்பாவும் பேருக்காக முகத்தில் சிரிப்பை வைத்துக்கொண்டு வாங்க என்று நலன் விசாரித்தார் , நிறைய பேசிக்கொண்டார்கள் பிறகு மாமா அப்பாவிடம் தன் மகன் திருமண பத்திரிக்கையை கொடுத்து எல்லோரும் கண்டிப்பா வந்துடனும் கோபம் எதுவும் வேண்டாம் அன்று ஏதோ தவறு நடந்துவிட்டது மன்னித்துவிடுங்கள் என்றார் , அவரை பார்க்க பாவமாக இருந்தது நீங்களும் வேண்டாம் உங்கள் உறவும் வேண்டாம் என்று வீராப்பாக பேசியவரா இவர் .... ம் ...
அம்மா சாப்பிட அழைத்தாள் சாப்பாட்டு மேசையில் மாமா அம்மாவின் கை பக்குவம் இப்படி அப்படி என்று பாராட்டிக்கொண்டே அம்மாவின் சமையலை ருசித்துக்கொண்டிருந்தார் , சரி மச்சான் கிளம்புறோம் இரண்டு நாள் முன்னாடியே வந்துடுங்க என்று இயல்பாக சொன்னவர் பழசு எதையும் மனசுல வச்சிக்காதிங்க என்றார் மறக்காமல் நல்ல பண்பு .... அம்மாவுக்கு மிகுந்த சந்தோசம் சரிங்க வந்துடறோம் என்று அப்பா அவர்களுக்கு விடை கொடுத்தார் , மாமி என்னிடம் வந்துடறா கண்ணு சின்ன வயசுல பார்த்தது எவ்வளவு வளந்துட்டா என்று என் தலை வருடிவிட்டு சென்றாள்.
அன்று மாலை கிளம்புவதற்கு எல்லோரும் தயாராக இருந்தோம் மாமா தொலைபேசியில் அழைத்திருந்தார் இதோ கிளம்பிட்டே இருக்கோம் நேற்று கொஞ்சம் வேலை இருந்தது இப்போ வந்துவிடுவோம் என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டு அம்மா வந்தாள் , கார் தயாராக இருந்தது ஓட்டுனர் காரை முன் பக்கம் துடைதுக்கொண்டிருந்தார் எங்களை கண்டதும் வந்து கதவை திறந்து விட அப்பா முன் பக்கமும் நானும் அம்மாவும் பின்புற இருக்கையிலும் அமர்ந்துகொண்டோம் அம்மாவின் முகத்தில் ஒரு புது சந்தோஷம் அதை பார்பதற்கு எனக்கே சந்தோஷமாக இருந்தது
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டும் மாலை நேரம் விடிந்தால் திருமணம் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையாக தான் இருந்தது இத்தனை வருடம் கழித்து பிரிந்திருந்த சில சொந்தங்களை சந்திக்க போகிறோமே என்ற சந்தோஷம் எதிர்பார்ப்பு , எவ்வளவு பெரிய குடும்பம் எத்தனை சொந்தம் இத்தனையும் இவ்வளவு காலம் பிரிந்திருந்தோமே நினைப்பதற்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தது ..... அப்பா எதோ யோசனையிலேயே இருந்தார் அம்மாவுக்கு தலை கால் புரியவில்லை எப்போது வரும்? எத்தனை மணிக்கு போய் சேருவோம் ? என்று கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள் இன்னும் அரை மணி நேரம் இருக்குங்கம்மா என்றார் அம்மாவை திரும்பி பார்த்தபடி சரிப்பா என்று அம்மா சொல்லிக்கொண்டிருக்கிலே அந்த சம்பவம்.
No comments:
Post a Comment