Total Pageviews

Monday, January 24, 2011

புது உலகத்தில் உன்னோடு

கண்ணா........... கண்ணா........ என்று அம்மாவின் குரல்….. இரும்மா வரேன் என்று மாடியில் இருந்து கீழே சென்றேன் அங்கே உமா அவளுடன் ஒருவன் , ம்.... யாராக இருக்கும் ? வா உமா எப்படி இருக்க என்றவனிடம் சும்மா தான் கண்ணா இவர் ஊரிலிருந்து வந்தார் உன்னை அறிமுகம் செய்ய அழைத்து வந்தேன் என்றவள் அவனிடம் இது கண்ணன் என்றும் என்னிடம் இது சங்கர் என் உறவினர் என்று அறிமுகம் செய்தாள், இருவரும் கை குலுக்கிகொண்டோம் அவன் என்னிடம் உங்களை பற்றி உமா நிறைய சொல்லி இருக்கா என்றான். அப்போதுதான் எனக்கு புரிந்தது நண்பன் சொன்னது , பேசிக்கொண்டே மாடியில்  இருந்த என் அறைக்கு சென்றோம்.  

என்ன கண்ணா அறையை சுத்தம் செய்கிறாயா என்றாள் என் புத்தக அலமாரியை திறந்துகொண்டே ம் என்றேன் வார்த்தைகள் கிடைக்காததால், உமா எத்தனை அன்பானவள் அழகானவள் அவளின் சிரிப்பு சொல்லவே தேவையில்லை பார்பவரை எல்லாம் தன்வசம் ஈர்க்கும் , அப்படித்தான் நானும் அவளிடம் ஈர்க்கப்பட்டேன் , அவளின் பார்வைக்காக ஏங்கும் நான் அவள் பார்க்கும் போது எங்காவது ஒளிந்துகொள்ளலாமா என்று நினைப்பேன் அவ்வளவு வசீகரம் , அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு உயிர் கொடுக்கும்.

ஆனால் அவளோ இன்று இந்த சங்கரை காதலிக்கிறாளாம் திருமணமும் செய்து கொள்ள போகிறாளாம் , என்ன செய்ய ? இதை யாரிடம் சொல்ல முடியும் ? எங்களின் நட்பு புரிந்த அவளே இப்படி செய்தால் நான் என்ன செய்வது ? என்றாவது ஒரு நாள் அவளுடன் சேர்ந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது அனால் இன்று ...... இதை எல்லாம் நினைத்து தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்…….

நான் சென்னையிலே வளர்ந்தவன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை என்று பெரிய குடும்பம் சொந்தபந்தங்கள் சொல்லவே வேண்டாம் நிறையவே இருக்கிறார்கள் , நான் எல்லோரிடமும் அன்பாகவும் எளிமையாகவும் பழகுவேன் என்பதால் எல்லோருக்கும் என்னை மிகவும் பிடிக்கும் . அவர்களுடன் இருப்பது என்றால் எனக்கும் பிடிக்கும் , நண்பர்களை சந்திக்க செல்வதைவிட வீட்டில் இவர்களுடன் நேரம் செலவழிப்பதையே விரும்புவேன் , ஆனால் இன்று இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்ல துணிந்து விட்டேன் இதற்க்கு காரணம் உமா ,    இவளின் நட்பு கிடைத்ததும் நண்பர்களிடம் பேசுவதை கூட குறைத்துகொண்டேனே , எப்போது இவள் என் காதலை புரிந்து கொள்ள போகிறாள் , இனிமேலும் புரிந்துகொண்டு என்ன ஆகபோகிறது ?


அவளின் இந்த முடிவு என்னை நிலைகுலைய செய்தது ஒன்றும் புரியாமல் தவித்தேன் , போவதற்கு முன் அவளை சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தேன் ஆனால் இன்று அவளே …. கடவுளே இது என்ன சோதனை ? என்ன கண்ணா புத்தகம் எல்லாம் எடுத்து பெட்டிக்குள்ள வைக்கிற என்றாள் சரி… இப்போது சொல்லிவிட வேண்டியதுதான், நான் மும்பைக்கு செல்கிறேன் உமா அங்கே வேலை கிடைத்து விட்டது என்றேன் இயல்பாக ஒ ! அப்படியா எங்கே தங்குவாய் எவ்வளவு காலம் என்று அவள் கேள்வி கேட்டதும் எனக்கு எங்காவது போய் முட்டிக்கொள்ளலாமா என்றுதான் தோன்றியது , இருப்பினும்… அங்கே என் அத்தை இருக்கிறார்கள் அவர்கள் வீட்டில் தான் தங்க போகிறேன் என்றேன் என் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டே ,எவ்வளவு இயல்பாக இருக்கிறாள் எப்படித்தான் முடிகிறதோ அவள் என்னை காதலிக்க வில்லை என்று தெரிந்ததும் உயிரை  விட நினைத்தேனே ஆனால் அவளோ அதே நட்புடன் இது நிச்சயம் என்னால் முடியாது அதனால் தான் கிளம்பிவிட்டேன் , உயிரை விடுவதை விட அவளின் நினைவுகளுடன் வாழ்வது எவ்வளவோ மேல், இனிமேல் புது இடம் புது மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத மொழி ..... அவளை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்க மொழி எதற்கு , என் உயிர் போதுமே நீ எனக்கு மட்டுமே சொந்தம் உன்னுடனே நான் இருக்க வேண்டும் என்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் ?




சரி உமா நான் வருகிறேன் என்றேன் சங்கரிடம் கை குலுக்கியபடி , முடிந்தால் உங்கள் திருமணதிற்கு வருகிறேன் என்றேன் பொய்யாக , அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்புகையில் என் கண்களில் கண்ணீர் . உன்னை விட்டு பிரிகிறேன் என்று அல்ல அன்பான என் குடும்பத்தை விட்டு பிரிகிரேனே . என் எதிகாலம் என்னை பார்த்து நிச்சயம் சிரிக்கும், ஏனென்றால் உன்னைப்போல் அதற்கும் காதலை பற்றி தெரியாது . 

No comments:

Post a Comment