Total Pageviews

Saturday, January 22, 2011

மாறியது மனம் மாற்றியது யாரோ ........

அம்மாஆ......... அம்மாஆ............. என்ற குழந்தையின் அழுகுரல் , வெகு நேரம்  கேட்டுகொண்டே இருந்தது , குரல் வந்த திசையை நோக்கி நடந்தேன் , ஒரு நான்கு வீடுகள் தள்ளி இருக்கும், குழந்தையின் அழுகுரல் மிக அருகில் ....... ஆமாம்…… கண்டு பிடித்துவிட்டேன் அந்த வீட்டில் தான்.... அட என்ன வீடு பூட்டி இருக்கு….. ஆனா குழந்தை எங்கே இருக்கிறது ? இன்னமும் அழுகுரல் கேட்டுகொண்டே இருந்தது, அருகே சென்று ஜென்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தேன் ஐயோ ! உள்ளே குழந்தை தனியாக அழுது கொண்டு இருந்தது .......

என்ன செய்வதென்று புரியாமல் சற்று நேரம் நின்றுகொண்டிருந்தேன் ...... எதுவும் தோணவில்லை ...சரி யாரவது உள்ளே இருப்பர்களோ ..... இல்லை இல்லை இருக்க முடியாது வெளியில் பூட்டி இருக்கிறதே இது எப்படி சாத்தியம் ?  ஒரு முடிவுக்கு வந்தவனாய் தெருவுக்கு வந்தேன் அங்கே இருந்த ஒரு கல்லை எடுத்து அந்த பூட்டை உடைத்தேன் ,  மூன்று வயதிருக்கும் அந்த ஆண் குழந்தைக்கு அப்படியே தூக்கிக்கொண்டு என் வீடு நோக்கி நடந்தேன் இன்னமும் அந்த குழந்தையின் அழுகை நின்றபாடில்லை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்று எனக்கும் விளங்கவில்லை  அதற்குள்ளாக வீடு வந்து சேர்ந்தது.


அம்மா அங்கே அடுப்படியில் எதையோ உருட்டிகொண்டிருந்தாள்  குழந்தையுடன் உள்ளே வந்த என்னை கண்டதும் இது என்னடா ஏன் இவனை இங்கே தூக்கிட்டு வந்தே என்றாள் அம்மா ..... என்ன ? உனக்கு இந்த குழந்தையை தெரியுமா ? இது யாரோட குழந்தை என்றேன் , நம்ம வீட்ல வேல செய்யிற வசந்தியோட குழந்தைடா இது என்று அம்மா சொன்னாள்  , இது எதுவும் புரியாமல் என் அம்மாவை கண்ட அந்த குழந்தை கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தது அதற்குள் வசந்தி கையில் ஒரு பையுடன் அங்கே வந்து சேர்ந்தாள் , ஏமா என்ன இது இப்படிதான் குழந்தையை உள்ளே வச்சி பூட்டிட்டு போவாங்களா என்றேன் கொஞ்சம் வெறுப்புடனும் கோபத்துடனும் ..... இல்லை ஐயா அம்மா……. கடைக்கு போய் காய் கறி வாங்கிட்டு வர சொன்னாங்க அதான்........ என்றாள்  குழந்தையை பார்த்துக்கொண்டே  அவளை பார்பதற்கு கொஞ்சம் பாவமாக தான் இருந்தது ... சரி இந்தா என்று குழந்தையை அவளிடம் கொடுத்த எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருந்தது நான் வீட்டில் சும்மா தானே இருந்தேன் அம்மா என்னை கடைக்கு போக சொல்லி இருக்கலாமே இல்லையேல் இந்த மாதிரி சிறு சிறு வீட்டு வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்காவது தோன்றி இருக்க வேண்டும் ........ ச்சே  எவ்வளவு சோம்பேறியாக இருக்கிறோம் ..... அவர்களும் மனிதர்கள் தானே இதை ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை ......என் மனதில் ஏதேதோ கேள்விகள் இனிமேல் என் வேலை.... என் வீட்டு வேலை..... என்னால் முடிந்த வேலைகளை நானே செய்வதென்று ஒரு முடிவுக்கு வந்தேன்  இந்த முடிவு ஒரு சிலரையாவது வருத்தத்திற்கு உள்ளாக்காது என்ற நம்பிக்கையுடன் ...........    

No comments:

Post a Comment