மனிதனின் குணங்கள் பல வகை
அதில் உன் குணம் எந்த வகை
என்பதை நீ உணர்ந்தாலே போதும் .
சில நேரம் குரங்கு குணம்
சில நேரம் மிருக குணம்
சில நேரம் அமைதி
சில நேரம் ஆங்காரம்
உன் கவனம் உன்னிடம் இருந்தால்
எந்த மிருக குணமும் வெளிவராது
சிலர் இதை தானாகவே வளர்க்கிறார்கள்
பலருக்கு இது இயற்கை குணம்
நன்றி என்னும் குணம் மறந்தால்
மனிதன் என்றுமே மிருகமாவான்
நல்லவை செய்பவன் மனிதன்
தீயதை நினைப்பவன் மிருகம்
ஆசையை அடக்குபவன் மனிதன்
ஆசைக்கு அடங்குபவன் மிருகம்
பழி சொல் கூறுபவன் மிருகம்
பழி ஏற்று கொள்பவன் மனிதன்
நீ மனிதனா மிருகமா ?
உன்னை ஆள்வது
மனிதமா மிருகமா ?
நீயே முடிவு செய் ...............
No comments:
Post a Comment