Total Pageviews

Monday, March 21, 2011

மீண்டும் அவள் வருவாளா ??????????????????

அன்றுதான் அவளை முதன் முதலில் சந்தித்தேன் , சின்ன பெண் அழகு என்று கூற இயலாது , அவளை பார்த்த நேரம் அந்த மாதிரியானது , நல்ல உறக்கம் நாள் முழுதும் வேலை பார்த்த களைப்பு , உறக்கத்தில் புரண்டு படுத்த எனக்கு ஏனோ விழிப்பு வந்தது அது எப்படி என்பது இன்றுவரை தெரியவில்லை . 

என் படுக்கைக்கு அருகில் ஒரு மேஜையும் ஒரு நாற்காலியும் போட்டிருந்தேன் . படுக்கையில் புரண்டு படுத்த நான் ஒருபுறம் சாய்ந்திருந்தேன் கண்ணை லேசாக திறந்தேன் ஏன் அருகில் யாரோ .......... யார் அது ? அதுவும் அந்த நாற்காலியில் அமர்ந்து என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள் அந்த சிறிய பெண் , வயது எட்டு முதல் பத்து வரை இருக்கும் . 

நான் அவளை பார்த்ததும் அவள் மகிழ்ந்தாளா இல்லையா என்று என்னால் யூகிக்க இயலவில்லை . அவளின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை . நான் அவளிடம் நீ யார் என்றேன் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என்றேன் என் கேள்வியை கவனித்தவளாகவே தெரியவில்லை அமைதியாக என்னை பார்த்துகொண்டிருந்தாள் அந்த பெண் .

என்னை போலவே அவளும் கத்தில் ஒரு தங்க வளையம் அணிந்திருந்தாள் அதை பார்த்த நான் என்ன நீ என்னை போலவே தங்க வளையம் அணிதிருக்கிராயே என்றேன் அதற்கும் பதில் இல்லை அவளிடம் . என்னை பார்த்துகொண்டிருப்பதை தவிர வேறு ஒன்றும் அவள் செய்தாளில்லை. 

திடீரென்று என் அறையின் கதவு திறந்து என் அம்மா வந்தாள், என்னை பார்த்து என்ன ஆச்சி ஏன் என்னை அழைத்தாய் என்றாள் .... என்ன ........ நான் அழைக்கவில்லையே என்றேன் ... பிறகு தண்ணீர் வேண்டும் குடிக்க என்றேன் . என் மீது அம்மாவுக்கு மிகுந்த அக்கறை பாசம் அதனால் நான் கேட்டதும் போய் தண்ணீர் கொண்டுவந்தாள். தண்ணீரை குடித்துவிட்டு அம்மா சென்றதும் மீண்டும் உறங்க தயாரானேன் நான் .

வெளியில் லேசாக மழை தூரிகொண்டிருந்தது .. ... ரசிக்க வேண்டிய ஒன்று ஆனால் ரசிப்பதற்கு இது நேரமில்லையே .. சரி உறங்கலாம் என்று நினைத்ததும் அவளின் நினைவு எங்கே அந்த பெண் ? இங்கேதானே அமர்ந்திருந்தாள் எங்கே போனாள் ?


சரி அவள் எங்கு சென்றால் என்ன என்று நினைக்கையில் ஜன்னலுக்கு வெளியில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு அங்கே அவள் அதே பார்வை . ஐயோ மழை வேறு தூரிகொண்டிருக்கிறதே நனைந்துவிட போகிறாள் என்று எண்ணி அவளை உள்ளே அழைத்தேன் வந்தாள். என் அருகில் அமரும்படி சொன்னேன் அமர்ந்தாள். சரி வா தூங்கலாம் என்று கூறி அருகில் படுக்க சொன்னேன் எதுவும் கூறாமல் அமைதியான அதே பார்வை .

அவளின் அந்த பார்வைக்கு எனக்கு இன்றுவரை அர்த்தம் தெரியவில்லை .  ஒரு தலையணையும் போர்வையும் அவளிடம் தந்தேன் அவள் அதை அன்புடன் வாங்கிகொண்டாள் பிறகு என் கட்டிலுக்கு அருகில் தரையில் என்னை பார்த்தவர் ஒரு புறமாக சாய்ந்து படுத்துக்கொண்டு மீண்டும் அதே பார்வை . தூங்கு என்றேன் அமைதியாய் . எதுவும் சொல்லவில்லை அவள் .

மீண்டும் என் அரை கதவு திறந்து அம்மா வந்தாள் நீ இன்னும் தூங்கவில்லையா என்று கேட்டவாறு இது என்ன ஏன் இவற்றை இங்கே தரையில் தள்ளி வைத்திருக்கிறாய் என்றால் அந்த தலையணையையும் போர்வையையும் பார்த்து . எதுவும் கூறாமல் அமைதியாய் திரும்பி படுத்துக்கொண்டேன் . சிந்தனையில் உறங்கியும் போனேன் . காலையில் தோலை பேசியின் சத்தம் கேட்டதும் தான் எழுந்தேன் .

இரவு நடந்தது கனவா இல்லை நிஜமா ஒன்றும் புரியவில்லை . நேராக அடுப்படியில் இருந்த அம்மாவிடம் சென்றேன் , எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிக்கொண்டிருக்கையில் அம்மாவே தொடங்கினாள், இரவு நடந்த அனைத்தையும் அவள் என்னிடம் கேட்டபோது நடந்தது அனைத்தும் உண்மைதான் என்று உணர்ந்தேன் ஆனால் அவள் யார் ? எதற்க்காக என்னிடம் வந்தாள் ? ஏன் ஏதும் பேசாமல் அமைதியாய் சென்றாள் ? இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியவில்லை இன்றுவரை ....... மீண்டும் அவள் வருவாளா 
 

No comments:

Post a Comment