புயல் மழை ஓடி ஒளிந்து
கொண்டு இருக்கிறார்கள் நான் மட்டும் இங்கே
மழையில் நனைந்து
புயலில் கை விரித்து
இங்கும் அங்கும் ஓடுகிறேன் .....
காரணம் பயம் இல்லை
ஆசையும் இல்லை
புயல் காற்றில் உன் சுவாசக்காற்று
கலந்திருப்பதால் கிடைத்தவரை
சுவாசித்து கொள்ளவே ஓடுகிறேன்
ஊராருக்கு எப்படி புரியும் இது ?
இறப்பதற்கு பயமில்லை
உன் மூச்சு காற்று
என்னுள் இருக்கும் வரை
எனக்கு இறப்பு இல்லை
இன்னும் ஓடுவேன்
பூலோக எல்லை வரை ......
என் காலில் வலிமை
இல்லை என்றாலும்
என் காதலுக்கு வலிமை உண்டு .....
No comments:
Post a Comment