நிலவு தூய்மையானது
களங்கம் இல்லாதது என்று
அறிந்திருந்தேன் உன்னை
சந்தித்த நாள் முதல் நீயும்
ஒரு நிலவாய் என் முன்னே
ஆனால் அன்று பார்த்த
அதே நிலவில் இன்று ஏதோ
களங்கம் அன்று இது என்
கண்களுக்கு தெரியவில்லையா
இல்லை நான் கண்டு
கொள்ளவில்லையா !!
அடுத்தவரின் உதவியால்
ஒளிரும் நிலவே நீ ஒரு
நாள் மட்டும் உன்னை
ஒளித்துகொள்வது உன் மனதில்
உள்ள களங்கத்தினால் தானோ !!
ஏய் நிலவே உன் தூய்மைதான்
உன்னை விரும்ப வைத்தது
உன் களங்கத்தை காட்டி
உன்னை வெறுக்க வைக்காதே
எப்போதும் நான் உந்தன் ரசிகன் !!!!
களங்கத்தைப் போக்கும் கவிதை..செல்வி...எப்போதும் நான் உங்கள் ரசிகன்..
ReplyDelete