பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன்
திடீரென்று ஏதோ ஒரு உணர்வு
அது என்ன சந்தோஷமா
இல்லை ஏதோ ஒரு உணர்வு
அட ! இந்த இடம் ம்...
இப்போது நினைவுக்கு வருகிறது
இதே இடத்தில் பல
நாள் நாம் இருவரும்......
அந்த நாளின் நினைவுகள்
இன்றும் என் மனதில் அழியாமல்
நீ மறந்திருப்பாயா இதை ?
நிச்சயம் இருக்காது
அந்த நாட்களை மறக்கவே முடியாதே
வெயில் மழை என்று
எதையும் அறியாமல் கை கோர்த்து
நடந்த நாட்களாயிற்றே
என் தோளோடு நீ சாய்ந்து
நடக்கையில் ஊரார் கண்படுமே
என்று அஞ்சியும் வெட்கியும்
ஓடிய நாட்கள் அல்லவா அது ...
இன்று நான், நான் மட்டும்
உன் நினைவுகளுடன் இங்கே ....
No comments:
Post a Comment