இதே கடற்க்கரை மணலில்
எத்தனை நாட்கள் நம்
இருவரும் கை கோர்த்து
நடந்தோம் உலகில் வேறு
உயிர்களே இல்லை என்ற
நினைப்புடன் எத்தனை
நாட்கள் மடியையே
தலையணையாய்
வானமே எல்லையாய்
அர்த்தமே இல்லாத கதைகளை
அருகில் இருப்பவர்கள்
அறியாமலும் நேரம்
போவதே தெரியாமலும் பேசி
ஆனந்த கூத்தாடிய அந்த
கனாக்காலம் மீண்டும்
எப்போது கிடைக்கும் ????
அர்த்தமே இல்லாத கதைகளை பேசிய அந்த கனாக் காலத்தை , அர்த்தமுள்ள கவிதையாக வடித்தெடுத்த செல்வியே...அடிக்கடி கடற்கரைக்கு செல்லுங்கள்...அப்போதுதான் இதுபோல கவிதைகள் பல எங்களுக்கு கிடைக்கும்...
ReplyDelete