Total Pageviews

Saturday, April 2, 2011

சூரியனே பதில் கூறு ........

அந்தி வானத்தில் 
மலைகளுக்கு இடையில் 
மறைந்து கொண்டு 
பார்க்கும் சூரியனே 
என் மீது உனக்கு 
அப்படி என்ன பயம் 
என்னை பற்றி உன்னிடம் 
யாரும் தவறாக ஏதேனும் 
கூறி விட்டார்களா என்ன
 உன் அழகு முகத்தை
 இப்படி ஒளித்து வைப்பதால் 
என்ன பெருமை உனக்கு 
இவ்வளவு விரைவில் 
சென்று உறங்க நினைக்கிறாயே 
உன்னை ஒளித்து நிலவுக்கு
ஒளி கொடுக்க நினைக்கிறாயே 
நிலவுக்கும் உனக்கும் அப்படி 
என்ன பந்தம் இருவரும் 
பேசி  வைத்து இதனை 
முடிவு செய்தீர்களா 
நீ செல்லும் நேரத்தில் 
நிலவும் நிலவு செல்லும் 
நேரத்தில் நீயும் வருகிறீர்களே 
இது என்ன கண்ணாமுச்சு 
விளையாட்டு யாரை
ஏமாற்ற இப்படி ஒரு நாடகம்
எல்லோரும் உறங்கியபின்
இருவரும் ரகசியமாக
எங்கேனும் சந்தித்து 
கொள்கிறீர்களா என் 
கேள்விகளுக்கு விடையளித்து 
விட்டு நீ ஒளிந்துகொள் ...

1 comment:

  1. சூரியனையே சுட்டெரிக்கும் கேள்விக் கணைகள் ..இதை உங்களைத் தவிர வேறு யாரால் தொடுக்க முடியும் செல்வி...?

    ReplyDelete