அன்பை தேடி தேடி கால்கள்
கடுக்க ஓடினேன்
அலைந்தேன் திரிந்தேன்
பித்து பிடித்தவளாகி போனேன்
தேடிய இடமெல்லாம்
வெறுமையாய் போனது
இன்றோ அன்பு என்னை
தேடி வந்தது ஆசையுடன்
ஏற்றுக்கொண்டேன்
ஆனால் அதை அனுபவிக்க
முடியாமல் மூச்சு
திணறி திக்கு முக்காடி
தவித்து போய் நிற்கிறேன்
இப்போதுதான் புரிகிறது
அதை தாங்கி கொள்ளும்
சக்தி எனக்கில்லை
என்பதால் தான் நான்
தேடிய போதெல்லாம்
எனக்கிது கிடைக்கவில்லை
இப்போதுதான் புரிகிறது..பாராட்ட முடியாமல் மூச்சு திணறி திக்கு முக்காடி தவித்து போய் நிற்கிறேன்..
ReplyDelete