Total Pageviews

Saturday, April 9, 2011

கலைத்துவிட்டாய் நீ !!!!!!!

என்ன நிறம் என்றே அறிந்து
 கொள்ள இயலாத அந்த மாலை
 வேளையில்  என் கண் 
முன்னே உன் முகம் ....

மாலை நேர தென்றல் காற்றில் 
ஏக்கத்துடன் உன் முன்னே
 நான்....

 தாயை கண்ட கன்றாய் 
தவித்தோடி வந்தேன் ஒரு 
புறம் நாணம் மறுபுறம் 
மௌனம்

பார்வையால் வினவினாய் நீ
பார்வையற்று போனேன் நான்
கன்னத்தை வருடினாய் நீ
கண்கள் மருகி போனேன் நான்

 நிஜமாய் என் முன்னே நீ
இருக்கையில் உன் நிழலை
தேடினேன் நான்

சொந்தங்களை தொலைத்த
ஒற்றை பறவையாய் நான்
தோளோடு உரசியபடி நீ

மாலை நேர வெய்யிலில் மங்கலாய் 
தோன்றும் நிலவாய் நான்...
கரு மேகத்தில் என்னை 
ஒளித்துக்கொள்ள காற்றாய் 
வந்து கலைத்துவிட்டாய் நீ !!!

1 comment:

  1. பார்வையால் வினவினாய் நீ
    பார்வையற்று போனேன் நான்..//பாராட்ட வார்த்தை அற்றுப் போனேன் நான்....கலைத்து விட்டாய் நீ...இந்தக் கவிதையில் கலக்கி விட்டாய் நீ...

    ReplyDelete