Total Pageviews

Saturday, April 9, 2011

காணாமல் போனாயே !! !! !!

தெளிந்த நீரோடையாய் 
இருந்த என் மனது  கல் 
எறிந்த குளத்தின் நீர் 
அலைகளை போல 
மாறிவிட்டது

 சூரியன் சந்திரன் விண்மீன்
வேறுபாடு இல்லாமல் இருந்த என்
 மனது  இன்று புது 
விண்மீனை கண்டது

ஊரார் அழுகையும் ஓசையாய்
கேட்கும் என் காதுகளில் 
குழந்தையின் குரலும் ஓலமாய் !!

இங்கே காதலனை  கண்ட 
காதலியாய் இருந்த என் மனது
 இன்று கீரியை கண்ட
 நாகமாய் மாறிவிட்டதே !!  

தென்றல் காற்றாய் 
வீசிகொண்டிருந்த என்னை
 கடும் புயலாய் மாற்றி விட்டாயே !!  

ஊமையாய் இருந்திருந்தால் 
வாய் மொழியாமல் 
இருந்திருப்பேன் ஆனால்
 இன்றோ வாய் பேச 
வார்த்தைகளையே தேட 
வைத்து விட்டாயே !!

 மூடிய இமைகளுக்கு முன் வந்த
 நீ இன்று திறந்திருந்தும் 
காணாமல் போனாயே !! 

1 comment:

  1. கவலை வேண்டாம்..காணாமல் போனவன் கட்டாயம் வருவான்....தெளிந்த நீரோடை போன்ற கவிதை...வாழ்த்துக்கள் செல்வி....

    ReplyDelete