மகனே நீ என்னை ஏறி
மிதித்தாலும் எட்டி
உதைத்தாலும் நான்
உன் அன்னை உன்னால்
நான் என்றுமே காயப்பட்டதில்லை
நீ உண்ணாத போது நானும்
உண்டதில்லை நீ உறங்காத
போது நானும் உறங்கியதில்லை
பொருந்தாது என்று
தெரிந்திருந்தும் உன்
காலடி தடத்திலெல்லாம்
என் காலடியை வைத்து
பார்த்தேன் பலமுறை
ஊர் போற்றும் அறிவாளியாக
நான் இருந்தாலும் உனக்கு முன்
முட்டாளாகி போனேன் !!!!!
ஊர் போற்றும் அறிவாளியாக
ReplyDeleteநான் இருந்தாலும் உனக்கு முன்
முட்டாளாகி போனேன் !!!!!//ஆம்...எல்லா அறிவாளிகளும் எப்போதோ ,எங்கேயோ முட்டாளாகிறார்கள் ..உண்மை செல்வி....