அந்த கரடு முரடான பாதையில்
வெகு தூரம் நடந்து சென்றேன்
கால்கள் பொத்துபோயின
மனதும் சலித்து விட்டது
நடக்க இயலாமல் தவித்து
போய் சோர்ந்து அமர்ந்தேன்
மரத்தடியில்.. வழக்கம்போல
சிந்தைனையில் உன்
நினைவுகள் உன்னை
நினைத்தால் நேரம் போவதே
தெரியாதே சலிப்பெல்லாம்
மறந்து போகுமே ..எழுந்து
நடந்தேன் பாதையில் புது
மாற்றம் என்ன அழகான
ஒற்றையடி பாதை ஆங்காங்கே
மலர்கள் ஆசையாய் நடந்தேன்
அதன் வழியே... பிறகுதான்
தெரிந்தது அது மலர்கள்
அல்ல உன் பாத சுவடுகள் என்று ....
இந்தக் கவிதையை எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே நினைவில் இல்லை...மீண்டும் மீண்டும் படிக்கிறேன்...மீண்டும்,மீண்டும்....
ReplyDelete