சிறு குழந்தையாக இருந்தபோது
வானத்தில் செல்லும் மேக
கூட்டங்களை பார்த்து
கற்பனையில் வடித்தேன்
பல நூறு உருவங்கள் இன்றும்
உன்னை நினைத்து அதே
கற்பனையில் பல நூறு
வடிவங்களாக வடித்து
கொண்டு இருக்கிறேன்
உன்னை அன்று அந்த
மேகங்களை காற்று வந்து
கலைத்து விட்டு சென்றது
போல என் நினைவுகளில்
உருவங்களாக வடித்த
உன்னை கலைத்து விடாதே
கலைந்து போவது உன்
உருவம் மட்டுமல்ல
என் உருவமும் தான்...!!
கலைந்து போவது உன்
ReplyDeleteஉருவம் மட்டுமல்ல
என் உருவமும் தான்.//இல்லை செல்வி..உங்கள் கனவுகளின் வடிவம் ,கற்பனைகளின் உருவம் எதுவும் கலையாது .. கலையக் கூடாது...