Total Pageviews

Thursday, April 14, 2011

சுமை தாங்கி ... !!!!!!!!!!!!!!!!!!!!

ஏய் பெண்ணே உன்
கண்களில் கண்ணீரா ...!!!!

பலரின் கண்ணீரை
துடைத்தவள் நீ இன்று
 உன் கண்ணீரை துடைக்க
இன்னொரு ஆளா ...

பலரின் கண்ணீரை உன்
அன்பினால் விலை
பேசியவள் நீ இன்று
உன் கண்ணீரை கவலை
கொண்டு விலை பேசுகிறாயா ...

பலரின் சோக கண்ணீரை
ஆனந்த கண்ணீராக மாற்றி
தந்தவள் நீ இன்று உன்
கண்களில் சோக கண்ணீரா ...

பலரின் சோகங்களை
 சுமப்பவள் நீ இன்று
உன் சோகங்களை இறக்கி
 வைக்க இடம் தேடுகிறாயா ....

உன் அன்பின் நிழலில்
உறங்கும் அன்பு
உள்ளங்களின் உறக்கத்தை
உன் கண்ணீரை காட்டி
கலைத்து விடாதே !

வேண்டாம் பெண்ணே
வேண்டாம் நீ என்றுமே
சோகம் தாங்கும் சுமை தாங்கி!!

1 comment:

  1. வேண்டாம் பெண்ணே
    வேண்டாம் நீ என்றுமே
    சோகம் தாங்கும் சுமை தாங்கி// போதும் பெண்ணே போதும்...நீ பட்ட பாடுகள் போதும்...சுமை தாங்கி சோர்ந்து போன நீ ,இனி சுகம் காண வேண்டும்...அதை நான் நிதம் காண வேண்டும்....

    ReplyDelete