Total Pageviews

Saturday, April 9, 2011

மாற்றி தருகிறேன் உன்னை !!!

கடற்கரை மணலில் கைகளை
தூக்கி கொண்டாடும் குழந்தையாய்
உன்னை நினைத்திருந்தேன்
ஆனால் நீயோ கரும் இருளில்
வரும் கள்வனாகி போய் விட்டாயே !! 

பட்டாம் பூச்சியாய் பறந்து விடலாம்
என்று எண்ணி இருந்தேன்
கூட்டு புழுவாகவே இருந்துவிட
 கட்டளை இட்டாயே  !!  

என் கண்களின் வெண்மையும்
கருமையுமாக உன்னை
வைத்திருந்தேனே உதிர்ந்துபோன
 இமையாய் விழுந்து விட்டாயே !!

என் அன்பு தோட்டத்தின்
ஒற்றை ரோஜாவாய் உன்னை
வைத்திருந்தேன் பூக்கூடையில்
 போய் அமர்ந்து கொண்டாயே !!

கலை சிற்பமாய் உன்னை
வடித்து வைத்தேன் நீயோ
கல்லறை தோட்டத்தில்
சிலையாய் நின்றுகொண்டாயே !!

உன்னை என் கைகளில்
கொடு ஒரே வானின்
ஒற்றை நிலவாய்
மாற்றி தருகிறேன் ......!!!

2 comments:

  1. அடடா...உங்களை இந்தப் பாடு படுத்திய அந்த கள்வனை என்ன செய்யலாம்..?.....ம்..... உந்தன் கைகளிலேயே கொடுத்து விடலாம்...

    ReplyDelete
  2. இனியாவது இதயம் நினைப்பதை கடவுள் பிரிக்காதிருக்கட்டும்.

    ReplyDelete