அமைதியான மாலை நேரம் , ஆபீசில் இருந்து கிளம்பும்போது வீட்டுக்கு போறதுக்கு முன் எங்காவது போயிட்டு போகலாமான்னு தோணியது , சரி பீச்சிக்கு போகலாம் என்று முடிவு செய்தேன் , வண்டியை உருட்டிக்கொண்டே பீச்சிக்கு சென்றேன் , மாலை நேரமாக இருந்ததால் நிறைய பேர் வந்திருந்தார்கள் , வெள்ளையும் மஞ்சளுமாக விளக்கொளி , நன்றாகத்தான் இருந்தது , காதலற்கு ஏற்ற இடம் இந்த பீச் தான் போலிருக்கிறது , ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தார்கள் , சிலர் நண்பர்களுடனும் சிலர் தங்கள் குடும்பத்தினருடனும் வந்திருந்தார்கள் , என்னை போல சில தனிமை விரும்பிகளும் அங்கே அமர்ந்து எதையோ தொலைத்து விட்டு தேடுபவர்களை போலவே அமர்ந்திருந்தார்கள்,
எங்காவது ஒரு இடத்தில் உட்கார வேண்டும் போல் இருந்தது , தண்ணீருக்கு அருகிலே சென்றால் நன்றாக இருக்குமே என்று நினைத்து நடந்தேன் , சில்லென்ற காற்று அப்பா......... இந்த காற்று பகல் முழுவதும் இருந்தால் என்ன என்று மனதிற்குள் கேட்டுகொண்டே தண்ணீருக்கு அருகில் வந்தேன் , ஈரம் இல்லாத ஒரு இடம் தேடி அமர்ந்தேன்.
யாரோ என் பெயர் சொல்லி அழைப்பது போல தோன்றவே மெல்ல திரும்பி பார்த்தேன் , அருகே என் நண்பன், என்ன ஆச்சர்யம் …… கூடவே சந்தோஷம் ……. இப்போதெல்லாம் நண்பர்களை சந்திக்க ஏது நேரம் ? அவன் என் அருகில் வந்து அமர்ந்தான் என்ன இந்த பக்கம் ? அதுவும் தனியா ? என்றவனிடம் சும்மாதான் போர் அடிச்சது ஆபீஸ்ல அதிக வேலை கொஞ்சம் காற்று வாங்கலாம் என்று வந்தேன் என்றேன், ஏன் இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லையே என்று நான் கேட்கவே எனக்கும் தொடர்ந்து வேலை இருந்ததால் அப்படியே இருந்து விட்டேன் மன்னிசிக்கோடா என்றான் , அது இன்னும் சந்தோஷமாக இருந்தது .
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவர்கள் சரி கிளம்பலாம் என்று வந்தவுடன் வா பேசிக்கொண்டே போகலாம் என்னோட வண்டி அங்கேதான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன் , என்ன ஒரு புத்துணர்ச்சி நம்பவே முடியவில்லை , இங்கே வரும்போது இருந்த மன நிலைக்கும் இப்போதுள்ள மன நிலைக்கும் எவ்வளவு வித்தியாசம் ..... உள்ளத்தில் எத்தனை தெளிவு ......வேலை வேலை என்று அலைந்து கொண்டு நமக்கு பிடித்த எதையும் செய்யாமல் எப்போதும் யார் யாருக்காகவோ வாழ்ந்துகொண்டிருப்பது என்ன பிழைப்பு ? நம் மனதிற்கு பிடித்த காரியத்தை நமக்காக செய்யும்போது அதில் எத்தனை சந்தோஷம் ........ இனிமேல் நமக்காக கொஞ்சம் வாழ வேண்டும் என்ற முடிவோடு வீடு திரும்பினேன் .
No comments:
Post a Comment