Total Pageviews

Thursday, February 17, 2011

வரம் வேண்டும் !!!!!!!!!!!!

உன் இமையில் ஒரு ஓரம்
அமர வரம் வேண்டும்
உன் இதய துடிப்பில் 
ஒரு முறை நான்
துடிக்க வரம் வேண்டும்
விழி மூடி நீ இருக்கையில்
அதன் உள்ளே ஒளிந்துகொள்ள
ஒரு வரம் வேண்டும்
உன் தலை முடியின் நிறமாய் நான்
மாற ஒரு வரம் வேண்டும்
ஒவ்வொரு முறை நீ
சுவாசிக்கும் போதும்
உன் இதயத்திற்குள்
சென்று வர வரம் வேண்டும்
உன் விரல்களில் என் முகம்
பதிக்க ஒரு வரம் வேண்டும்
ஒரு முறையேனும் உன்னை
துயில வைக்கும் வரம் வேண்டும்
வெளியில் நீ நடக்கும் போது
உன் நிழலில் நான் வாழ
ஒரு வரம் வேண்டும்
நீ புன்னகை செய்யும்போது
உன் இதழில் முத்தமிட
ஒரு வரம் வேண்டும்
உன் வார்த்தையின் மொழியாய்
நான் மாற ஒரு வரம் வேண்டும்
உன் தோள் மீது ஒரே ஒரு
முறை துஞ்ச வரம் வேண்டும்

2 comments:

  1. வரம் நீ என்னிடம் கேட்கிறாயா அல்லது
    கடவுளிடம் கேட்கிறாயா

    ReplyDelete
  2. வரம் என்னமோ ரொம்ப நியாயமாகத்தான் உள்ளது...ஆனால்,வரம் கேட்க பட்ட சாமீ தான் சக்தி இல்லாமல் போய்விட்டது.(பேசாமல் சாமிய மாத்துங்க...)

    ReplyDelete