எனக்கே தெரியாமல் எங்கேயோ இருந்து
எப்போதும் என்னை பார்த்துக்கொண்டிருக்கும் நீ
எங்கேயோ அமர்ந்து உன்னை நினைத்து
கொண்டிருக்கும் நான் ஆனந்தமாய்...
கவலை இல்லை கண்ணீர் இல்லை
என்றோ ஒரு நாள் நீ சொன்னது
இன்றும் என் நினைவில்......
கேட்காமல் தந்தாய் அன்று
யோசித்து நின்றாய் இன்று
கடவுளும் நீ கனவிலும் நீ ......
காற்றிலே ஓடி கன்னம் வருடினாலும்
சில்லென்ற உன் வருடல் உன்னை
உணரவைக்குமே......
உன் இனிப்பு புன்னகைக்கு ஈடேது இங்கே ?
உன் வருடலில் கிறங்கி போன
நாட்கள் தான் எத்தனை ......
நாட்கள் தான் எத்தனை ......
கண்ணீரை துடைக்கும் உன் விரல்களில்தான்
எத்தனை மென்மை, பெண்ணாய் இருந்தால்
பிறர் விட மாட்டார்
ஆணாய் இருந்தும் அடக்கம் ஏன் ?
உனக்காக ஏங்கும் உள்ளம் இங்கே
ஒருநாளேனும் உருவமாய் வா
ஏங்கி கிடக்கும் நினைப்பு
வேண்டும் அதே அணைப்பு ......
No comments:
Post a Comment