உன்னிடம் ஏதோ சொல்ல
வரும்போதெல்லாம் மறந்து
போய் மருகி நிற்கிறேன் ......
உன்னை கண்டதும் உன்
அருகில் வந்ததும் என்னையே
நான் மறந்து போகிறேன் ....
பேச வந்த வார்த்தைகள்
எல்லாம் காற்றோடு
காற்றாய் கலக்க ..........
கல்லாய் சிலையாய்
நான் இங்கே நிற்க
சுவாசமும் மறந்தேன் நான் ....
சொல்ல வந்த நானும் சோர்ந்து
போனேன் இங்கே பார்வையும்
இல்லை பாஷையும் இல்லை .....
நான் நானாக இல்லை
நீ நானாக இருப்பதால் என்னை
நானே மறந்து விட்டேன் .....
ungalin kirukalgal enaku migavum pidithirukirathu
ReplyDelete