அமைதியான இரவு சில்லென்ற
தென்றல் தினமும் வீசும்
அதே தென்றல் தான் என்றாலும்
ஏனோ தெரியவில்லை
இன்று மட்டும் என்னை
வருடிவிட்டு செல்வது போன்ற
உணர்வு எங்கோ தூரத்தில்
நாய்கள் குரைக்கும் சத்தம்
தூரத்தில் சாலையில்
வாகனங்கள் ஊர்ந்து செல்லும்
சத்தம் எல்லாமே இரவின்
நிசப்தத்தை காட்டுகையில்
என் அறையின் கடிகார
முள்ளின் டிக் டிக் ஓசை மட்டும்
உன் இதயம் துடிக்கும் ஓசையாய்
என் காதுகளில் கற்பனையில்
கண்களை மூடி உன் நினைவுகளை
அசைபோட என் கண்களை
உறக்கம் கவ்விக்கொள்ள
கனவுலகில்உன்னோடு
பயணிக்கிறேன் ..............
இன்று மட்டும் என்னை
ReplyDeleteவருடிவிட்டு செல்வது போன்ற
உணர்வு..// ஒவ்வொருமுறை படிக்கும்போதும் தென்றல் எங்களை வருடும் உணர்வு..கனவுலகில் உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் செல்வி...