இனிமையான மாலை
பொழுதில் அரை நிலவு
வானத்தில் அமர்ந்திருந்தது .....
அதன் அழகை ரசித்தவாறு
அங்கும் இங்குமாக
நடைபயணம் ...
தென்னை மரத்தில்
சிட்டுகளின் கீச் கீச் ஒலி
தனிமையில் நான்
ஆனாலும் யாரோ
என்னுடன் பயணிப்பது
போன்ற ஒரு பிரம்மை .....
இல்லை இது பிரம்மை இல்லை
இது நிச்சயமான ஒரு நிகழ்வு
என் அருகில் உருவமில்லாத
பலர் பயணித்துக்கொண்டு
இருக்கிறார்கள் ஆம் அவர்கள்
வேறு யாருமல்ல சில
எதிரிகளும் சில நண்பர்களும்
தான் தம் நினைவுகளால்
என்னுடன் பயணிக்கின்றனர் .....
பயணங்கள் முடிவதில்லை..செல்வியின் கவிதைகளுக்கு ஈடு இணை எதுவும் இல்லை...
ReplyDelete