Total Pageviews

Monday, April 4, 2011

எனக்கு பிடித்தவை ..!!!!!!!!!!!

மலரை எனக்கு பிடிக்கும்
மற்றவரை மகிழ்விப்பதினால் !!

ஆசை எனக்கு பிடிக்கும்
ஏமாற்றம் தருவதினால் !!

ஏமாற்றம் எனக்கு பிடிக்கும்
கவலையை தருவதினால் !!

கவலையை எனக்கு பிடிக்கும்
அழுகையை தருவதினால் !!

அழுகையை எனக்கு பிடிக்கும்
கண்ணீரை தருவதினால் !!

கண்ணீரை எனக்கு பிடிக்கும்
கவலையை மறப்பதினால் !!

மழையை எனக்கு பிடிக்கும்
என் கண்ணீரை மறைப்பதினால் !!

1 comment:

  1. மழையை எனக்கு பிடிக்கும்
    என் கண்ணீரை மறைப்பதினால் !!//எங்கோ ஆரம்பித்து ,எங்கோ பயணித்து எங்கோ முடிந்த..இதயத்தில் நிறைந்த கவிதை...அருமை செல்வி...

    ReplyDelete