"அன்பு" என்ற ஒன்றை
வார்த்தையில் தான்
அறிந்திருந்தேன் இன்றோ
அன்பின் உருவமாய்
என் முன்னே நீ ........
"காதல்" எழுத்துக்களில்
தான் வாசித்து
இருக்கிறேன் இன்றோ
காதலின் வடிவமாய்
என் முன்னே நீ ......
"பாசம்" பலர் கூறி
கேள்வி பட்டிருக்கிறேன்
இன்றோ அதன்
ஊற்றாய் என்
முன்னே நீ ......
"கருணை" கடவுளின்
அடையாளம் என்று
கூறினார்கள் இன்றோ
கருணை மழையாய்
என் முன்னே நீ ......
"அக்கறை" இது பிறருக்கு
நான் காட்டியது
இன்றோ எனக்காக
அக்கறை பட
என் முன்னே நீ ......
"தாய்" பாலூட்டி சீராட்டியவள்
தான் என்று எண்ணி
இருந்தேன் இன்றோ
அன்பால் அரவணைத்து
தாயாய் என் முன்னே நீ ...
"வீடு" தங்கும் இடம்
என்பது தான் தெரியும்
இன்றோ உன் உள்ளம்
எனக்கு நிரந்தர
வீடாகி போனதே ....
செல்வி...நான் கடவுளைக் கண்டேன்..உன் கவிதை வடிவிலே...ஒரு குழந்தையைக் கண்டேன்..உந்தன் மழலை மொழியிலே...
ReplyDelete