Total Pageviews

Monday, January 24, 2011

தவறு யாருடையது

அன்று காலை வீடே பரபரப்பாக இருந்தது , மாமா வர போகிறாராம் , வரட்டுமே என்றுதானே நினைக்கிறீர்கள் ? இதில் விசேஷம் இருக்கிறது 10 வருடம் கழித்து அவர் வருவது தான் இந்த பரபரப்பிற்கு காரணம் , அம்மா அடுப்படியில் எதோ விதம் விதமாய் சமைதுக்கொண்டிருந்தாள் உடன் பிறந்தவராயிற்றே , நிச்சயம் இருக்கும் , அப்பா செய்தி தாளை வைத்துகொண்டு இருந்தாரே தவிர அவர் முகத்தில் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது , தாத்தா இறந்த பிறகு சண்டை போட்டுகொண்டவர்கள்தான் பிறகு எந்த தொடர்பும் இல்லை , ஆனால் இப்போது அவரின் மூத்த மகன் திருமணத்திற்காக அழைக்க வருகிறார்கள் சரி வரட்டும் என்று இருந்தார் அப்பா , அம்மாவுக்காக அமைதியாக இருந்தார் .

 கார் சத்தம் கேட்டதும் அம்மாவின் குரல் அங்கே பாருங்க வந்துட்டாங்க போலிருக்கு ...... என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே கார் வாசலில் வந்து நின்று அதிலிருந்து மாமா மாமி மாமியின் அக்கா அவரின் மகன் ஒரு குழந்தை என்று ஒரவர் பின் ஒருவராக இறங்கினார்கள் , இதை பார்த்த எனக்கே சந்தோஷம் என்றால் அம்மா எப்படி சந்தொஷபடுவாள் , ஆம் அவளே வந்துவிட்டாள்  வாங்க அண்ணா வாங்க அண்ணி….   ம்.... வாங்க வாங்க என்று அழைத்துக்கொண்டே உள்ளே செல்ல இவர்கள் என்னை நீ எப்படி இருக்க என்று கேட்டு கொண்டே அம்மாவை பின்தொடர்ந்தார்கள் , அப்பாவும் பேருக்காக முகத்தில் சிரிப்பை வைத்துக்கொண்டு வாங்க என்று நலன் விசாரித்தார் , நிறைய பேசிக்கொண்டார்கள் பிறகு மாமா அப்பாவிடம் தன் மகன் திருமண பத்திரிக்கையை கொடுத்து எல்லோரும் கண்டிப்பா வந்துடனும் கோபம் எதுவும் வேண்டாம் அன்று ஏதோ தவறு நடந்துவிட்டது மன்னித்துவிடுங்கள் என்றார் , அவரை பார்க்க பாவமாக இருந்தது நீங்களும் வேண்டாம் உங்கள் உறவும் வேண்டாம் என்று வீராப்பாக பேசியவரா இவர் .... ம் ...

அம்மா சாப்பிட அழைத்தாள் சாப்பாட்டு மேசையில் மாமா அம்மாவின் கை பக்குவம் இப்படி அப்படி என்று பாராட்டிக்கொண்டே அம்மாவின் சமையலை ருசித்துக்கொண்டிருந்தார் , சரி மச்சான் கிளம்புறோம் இரண்டு நாள் முன்னாடியே வந்துடுங்க என்று இயல்பாக சொன்னவர் பழசு எதையும் மனசுல வச்சிக்காதிங்க என்றார் மறக்காமல் நல்ல பண்பு .... அம்மாவுக்கு மிகுந்த சந்தோசம் சரிங்க வந்துடறோம் என்று அப்பா அவர்களுக்கு விடை கொடுத்தார் , மாமி என்னிடம் வந்துடறா கண்ணு சின்ன வயசுல பார்த்தது எவ்வளவு வளந்துட்டா என்று என் தலை வருடிவிட்டு சென்றாள்.


அன்று மாலை கிளம்புவதற்கு எல்லோரும் தயாராக இருந்தோம் மாமா தொலைபேசியில் அழைத்திருந்தார் இதோ கிளம்பிட்டே இருக்கோம் நேற்று கொஞ்சம் வேலை இருந்தது இப்போ வந்துவிடுவோம் என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டு அம்மா வந்தாள் , கார் தயாராக இருந்தது ஓட்டுனர் காரை முன் பக்கம் துடைதுக்கொண்டிருந்தார் எங்களை கண்டதும் வந்து கதவை திறந்து விட அப்பா முன் பக்கமும் நானும் அம்மாவும் பின்புற இருக்கையிலும் அமர்ந்துகொண்டோம் அம்மாவின் முகத்தில் ஒரு புது சந்தோஷம் அதை பார்பதற்கு எனக்கே சந்தோஷமாக  இருந்தது
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டும் மாலை நேரம் விடிந்தால் திருமணம் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையாக தான் இருந்தது இத்தனை வருடம் கழித்து பிரிந்திருந்த சில சொந்தங்களை சந்திக்க போகிறோமே என்ற சந்தோஷம் எதிர்பார்ப்பு , எவ்வளவு பெரிய குடும்பம் எத்தனை சொந்தம் இத்தனையும் இவ்வளவு காலம் பிரிந்திருந்தோமே நினைப்பதற்கே கொஞ்சம் சங்கடமாக இருந்தது ..... அப்பா எதோ யோசனையிலேயே இருந்தார் அம்மாவுக்கு தலை கால் புரியவில்லை எப்போது வரும்?  எத்தனை மணிக்கு போய் சேருவோம் ? என்று கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள் இன்னும் அரை மணி நேரம் இருக்குங்கம்மா என்றார் அம்மாவை திரும்பி பார்த்தபடி சரிப்பா என்று அம்மா சொல்லிக்கொண்டிருக்கிலே அந்த சம்பவம்.



என்ன நடந்ததென்றே யாருக்கும் விளங்கவில்லை நான் கண்விழித்து பார்த்தேன் அது ஒரு வீட்டின் அரை என்பது போல் இருந்தது இல்லை இல்லை படுக்கை வித்தியாசமாக இருந்தது ஓ....... இது ஒரு மருத்துவமனை இங்கும் அங்கும் பார்த்துகொண்டிருந்தேன் ஒரு நர்ஸ் வந்து எப்படி இருக்கீங்க என்று அன்புடன் விசாரித்தார் ம் என்று பதில் அளித்துவிட்டு மீண்டும் வாயிற்பக்கம் எட்டி பார்த்தேன் நீங்க படுங்க கொஞ்சம் ஓய்வெடுங்க என்று என்னை கட்டாயபடுத்தி படுக்கு வைத்தார்  சிறிது நேரம் கழித்து ஒரு மருத்துவர் வந்தார் அவரிடம் சார் என் அம்மா அப்பா என்றேன் அவர் நீங்கள் இப்போது எப்படி இருக்கின்றீர்கள் என்றார் , சார் .... என்றவளை அம்மா அங்கே அடுத்த அறையில் என்றார் நான் பார்க்க வேண்டும் என்றதும் சரி நாளை பார்த்துக்கொள்ளலாம் என்றார் , எப்பொழுது பொழுது விடியும் என்றிருந்தேன் எனக்கு கையில் தலையில் என்று கொஞ்சம் அடி பட்டிருக்கிறது வலி தாங்க முடியவில்லை பாவம் அம்மா எப்படி இருக்கிறாளோ என்று நினைதுக்கொண்டிருக்கும்போதே அங்கே மாமா, மாமி இன்னும் சிலர் வந்துசேர்ந்தார்கள் , அவர்களிடம் அம்மா அப்பா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டதுதான் ஒ என்று அழ ஆரம்பித்து விட்டார்கள் எனக்கு இவர்கள் ஏன் அழுகிறார்கள் என்றே விளங்கவில்லை அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என்றேன் , மாமி என்னருகில் வந்து என்னை அவளின்மீது சாய்த்துக்கொண்டு அவர்கள் இருவரும் இல்லைமா என்று கதறி அழதொடங்கினாள் ச்சே என்ன இது ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தேன் சரி வா வீட்டுக்கு போகலாம் என்று என்னை அந்த அறையிலிருந்து அழைத்து கொண்டு சென்றார்கள் அப்போதும் தேடினேன் , அம்மா அப்பா இருவரையுமே காணவில்லை .வீட்டில் இருப்பார்கள் என்று நினைத்து சென்றால் அங்கே நான் கன்னடத்து ச்சே இருக்காது இது போய்தான் ஆம் அவர்களின் புகைப்படம் தான் மாலை அணிவித்து இருந்தது எனக்கு ஏனோ அழுகை வரவில்லை அவர்கள் என்னிடம் நடந்ததை கூறினார்கள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை நான் இப்போது என்ன செய்ய போகிறேன் ? எங்கு செல்வேன் ? அம்மா அப்பா இல்லாத வழக்கை ஒரு வாழ்கையா ? நினைத்து பார்க்கவே முடியவில்லை யார் மீது குற்றம் ? பல வருடம் கழித்து வந்த மாமா மீதா ? கடவுளின் மீத ? இல்லை கார் ஓட்டுனர் மீதா ? இல்லை அவரை கேள்வி கேட்டுகொண்டே வந்த அம்மா மீதா ? ஆம் அம்மாவின் தவறுதான் அவள் அமைதியா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா ? இது அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் . வாகனம் ஓட்டும்போது எவ்வளவு கவனம் தேவை என்பதையும் அதனால் ஏற்படும் இழப்பு எவ்வளவு என்பதையும்  என்  நிலையை பார்த்து தெரிந்து கொள்ளட்டும்

புது உலகத்தில் உன்னோடு

கண்ணா........... கண்ணா........ என்று அம்மாவின் குரல்….. இரும்மா வரேன் என்று மாடியில் இருந்து கீழே சென்றேன் அங்கே உமா அவளுடன் ஒருவன் , ம்.... யாராக இருக்கும் ? வா உமா எப்படி இருக்க என்றவனிடம் சும்மா தான் கண்ணா இவர் ஊரிலிருந்து வந்தார் உன்னை அறிமுகம் செய்ய அழைத்து வந்தேன் என்றவள் அவனிடம் இது கண்ணன் என்றும் என்னிடம் இது சங்கர் என் உறவினர் என்று அறிமுகம் செய்தாள், இருவரும் கை குலுக்கிகொண்டோம் அவன் என்னிடம் உங்களை பற்றி உமா நிறைய சொல்லி இருக்கா என்றான். அப்போதுதான் எனக்கு புரிந்தது நண்பன் சொன்னது , பேசிக்கொண்டே மாடியில்  இருந்த என் அறைக்கு சென்றோம்.  

என்ன கண்ணா அறையை சுத்தம் செய்கிறாயா என்றாள் என் புத்தக அலமாரியை திறந்துகொண்டே ம் என்றேன் வார்த்தைகள் கிடைக்காததால், உமா எத்தனை அன்பானவள் அழகானவள் அவளின் சிரிப்பு சொல்லவே தேவையில்லை பார்பவரை எல்லாம் தன்வசம் ஈர்க்கும் , அப்படித்தான் நானும் அவளிடம் ஈர்க்கப்பட்டேன் , அவளின் பார்வைக்காக ஏங்கும் நான் அவள் பார்க்கும் போது எங்காவது ஒளிந்துகொள்ளலாமா என்று நினைப்பேன் அவ்வளவு வசீகரம் , அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்பவருக்கு உயிர் கொடுக்கும்.

ஆனால் அவளோ இன்று இந்த சங்கரை காதலிக்கிறாளாம் திருமணமும் செய்து கொள்ள போகிறாளாம் , என்ன செய்ய ? இதை யாரிடம் சொல்ல முடியும் ? எங்களின் நட்பு புரிந்த அவளே இப்படி செய்தால் நான் என்ன செய்வது ? என்றாவது ஒரு நாள் அவளுடன் சேர்ந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது அனால் இன்று ...... இதை எல்லாம் நினைத்து தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்…….

நான் சென்னையிலே வளர்ந்தவன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை என்று பெரிய குடும்பம் சொந்தபந்தங்கள் சொல்லவே வேண்டாம் நிறையவே இருக்கிறார்கள் , நான் எல்லோரிடமும் அன்பாகவும் எளிமையாகவும் பழகுவேன் என்பதால் எல்லோருக்கும் என்னை மிகவும் பிடிக்கும் . அவர்களுடன் இருப்பது என்றால் எனக்கும் பிடிக்கும் , நண்பர்களை சந்திக்க செல்வதைவிட வீட்டில் இவர்களுடன் நேரம் செலவழிப்பதையே விரும்புவேன் , ஆனால் இன்று இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்ல துணிந்து விட்டேன் இதற்க்கு காரணம் உமா ,    இவளின் நட்பு கிடைத்ததும் நண்பர்களிடம் பேசுவதை கூட குறைத்துகொண்டேனே , எப்போது இவள் என் காதலை புரிந்து கொள்ள போகிறாள் , இனிமேலும் புரிந்துகொண்டு என்ன ஆகபோகிறது ?


அவளின் இந்த முடிவு என்னை நிலைகுலைய செய்தது ஒன்றும் புரியாமல் தவித்தேன் , போவதற்கு முன் அவளை சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தேன் ஆனால் இன்று அவளே …. கடவுளே இது என்ன சோதனை ? என்ன கண்ணா புத்தகம் எல்லாம் எடுத்து பெட்டிக்குள்ள வைக்கிற என்றாள் சரி… இப்போது சொல்லிவிட வேண்டியதுதான், நான் மும்பைக்கு செல்கிறேன் உமா அங்கே வேலை கிடைத்து விட்டது என்றேன் இயல்பாக ஒ ! அப்படியா எங்கே தங்குவாய் எவ்வளவு காலம் என்று அவள் கேள்வி கேட்டதும் எனக்கு எங்காவது போய் முட்டிக்கொள்ளலாமா என்றுதான் தோன்றியது , இருப்பினும்… அங்கே என் அத்தை இருக்கிறார்கள் அவர்கள் வீட்டில் தான் தங்க போகிறேன் என்றேன் என் பெட்டியை கையில் எடுத்துக்கொண்டே ,எவ்வளவு இயல்பாக இருக்கிறாள் எப்படித்தான் முடிகிறதோ அவள் என்னை காதலிக்க வில்லை என்று தெரிந்ததும் உயிரை  விட நினைத்தேனே ஆனால் அவளோ அதே நட்புடன் இது நிச்சயம் என்னால் முடியாது அதனால் தான் கிளம்பிவிட்டேன் , உயிரை விடுவதை விட அவளின் நினைவுகளுடன் வாழ்வது எவ்வளவோ மேல், இனிமேல் புது இடம் புது மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத மொழி ..... அவளை மட்டுமே நினைத்துக்கொண்டிருக்க மொழி எதற்கு , என் உயிர் போதுமே நீ எனக்கு மட்டுமே சொந்தம் உன்னுடனே நான் இருக்க வேண்டும் என்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் ?




சரி உமா நான் வருகிறேன் என்றேன் சங்கரிடம் கை குலுக்கியபடி , முடிந்தால் உங்கள் திருமணதிற்கு வருகிறேன் என்றேன் பொய்யாக , அம்மாவிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்புகையில் என் கண்களில் கண்ணீர் . உன்னை விட்டு பிரிகிறேன் என்று அல்ல அன்பான என் குடும்பத்தை விட்டு பிரிகிரேனே . என் எதிகாலம் என்னை பார்த்து நிச்சயம் சிரிக்கும், ஏனென்றால் உன்னைப்போல் அதற்கும் காதலை பற்றி தெரியாது . 

Saturday, January 22, 2011

மாறியது மனம் மாற்றியது யாரோ ........

அம்மாஆ......... அம்மாஆ............. என்ற குழந்தையின் அழுகுரல் , வெகு நேரம்  கேட்டுகொண்டே இருந்தது , குரல் வந்த திசையை நோக்கி நடந்தேன் , ஒரு நான்கு வீடுகள் தள்ளி இருக்கும், குழந்தையின் அழுகுரல் மிக அருகில் ....... ஆமாம்…… கண்டு பிடித்துவிட்டேன் அந்த வீட்டில் தான்.... அட என்ன வீடு பூட்டி இருக்கு….. ஆனா குழந்தை எங்கே இருக்கிறது ? இன்னமும் அழுகுரல் கேட்டுகொண்டே இருந்தது, அருகே சென்று ஜென்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தேன் ஐயோ ! உள்ளே குழந்தை தனியாக அழுது கொண்டு இருந்தது .......

என்ன செய்வதென்று புரியாமல் சற்று நேரம் நின்றுகொண்டிருந்தேன் ...... எதுவும் தோணவில்லை ...சரி யாரவது உள்ளே இருப்பர்களோ ..... இல்லை இல்லை இருக்க முடியாது வெளியில் பூட்டி இருக்கிறதே இது எப்படி சாத்தியம் ?  ஒரு முடிவுக்கு வந்தவனாய் தெருவுக்கு வந்தேன் அங்கே இருந்த ஒரு கல்லை எடுத்து அந்த பூட்டை உடைத்தேன் ,  மூன்று வயதிருக்கும் அந்த ஆண் குழந்தைக்கு அப்படியே தூக்கிக்கொண்டு என் வீடு நோக்கி நடந்தேன் இன்னமும் அந்த குழந்தையின் அழுகை நின்றபாடில்லை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்று எனக்கும் விளங்கவில்லை  அதற்குள்ளாக வீடு வந்து சேர்ந்தது.


அம்மா அங்கே அடுப்படியில் எதையோ உருட்டிகொண்டிருந்தாள்  குழந்தையுடன் உள்ளே வந்த என்னை கண்டதும் இது என்னடா ஏன் இவனை இங்கே தூக்கிட்டு வந்தே என்றாள் அம்மா ..... என்ன ? உனக்கு இந்த குழந்தையை தெரியுமா ? இது யாரோட குழந்தை என்றேன் , நம்ம வீட்ல வேல செய்யிற வசந்தியோட குழந்தைடா இது என்று அம்மா சொன்னாள்  , இது எதுவும் புரியாமல் என் அம்மாவை கண்ட அந்த குழந்தை கொஞ்சம் சிரிக்க ஆரம்பித்தது அதற்குள் வசந்தி கையில் ஒரு பையுடன் அங்கே வந்து சேர்ந்தாள் , ஏமா என்ன இது இப்படிதான் குழந்தையை உள்ளே வச்சி பூட்டிட்டு போவாங்களா என்றேன் கொஞ்சம் வெறுப்புடனும் கோபத்துடனும் ..... இல்லை ஐயா அம்மா……. கடைக்கு போய் காய் கறி வாங்கிட்டு வர சொன்னாங்க அதான்........ என்றாள்  குழந்தையை பார்த்துக்கொண்டே  அவளை பார்பதற்கு கொஞ்சம் பாவமாக தான் இருந்தது ... சரி இந்தா என்று குழந்தையை அவளிடம் கொடுத்த எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருந்தது நான் வீட்டில் சும்மா தானே இருந்தேன் அம்மா என்னை கடைக்கு போக சொல்லி இருக்கலாமே இல்லையேல் இந்த மாதிரி சிறு சிறு வீட்டு வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்காவது தோன்றி இருக்க வேண்டும் ........ ச்சே  எவ்வளவு சோம்பேறியாக இருக்கிறோம் ..... அவர்களும் மனிதர்கள் தானே இதை ஏன் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை ......என் மனதில் ஏதேதோ கேள்விகள் இனிமேல் என் வேலை.... என் வீட்டு வேலை..... என்னால் முடிந்த வேலைகளை நானே செய்வதென்று ஒரு முடிவுக்கு வந்தேன்  இந்த முடிவு ஒரு சிலரையாவது வருத்தத்திற்கு உள்ளாக்காது என்ற நம்பிக்கையுடன் ...........    

நண்பனின் வேண்டுகோள்

உன் சோகம் வாட்டுவது
 உன்னை மட்டுமல்ல 
என்னையும்தான் 
 உன் இன்பத்தில் மட்டுமல்ல 
துன்பத்திலும் பங்குகொள்ள
 எனக்கும் அனுமதி கொடு 
 உன் சந்தோஷம் என்னை
சந்தோஷபடுத்தும் என்று நினைத்த நீ
 உன் சோகம் என்னையும்
வாட்டும் என்பதை ஏன்
புரிந்துகொள்ளாமல் போனாய் ?
பகிர்ந்துகொள் .....  காத்திருக்கிறேன் ............
நீ சிரித்தால் சிரிப்பேன் ......
அழுதால் அழுவேன் ...............

Friday, January 21, 2011

எனக்காக ஒரு நாள்

அமைதியான மாலை நேரம் , ஆபீசில் இருந்து கிளம்பும்போது வீட்டுக்கு போறதுக்கு முன் எங்காவது போயிட்டு போகலாமான்னு தோணியது , சரி பீச்சிக்கு போகலாம் என்று முடிவு செய்தேன் , வண்டியை உருட்டிக்கொண்டே பீச்சிக்கு சென்றேன் , மாலை நேரமாக இருந்ததால் நிறைய பேர் வந்திருந்தார்கள் , வெள்ளையும் மஞ்சளுமாக விளக்கொளி , நன்றாகத்தான் இருந்தது , காதலற்கு ஏற்ற இடம் இந்த பீச் தான் போலிருக்கிறது , ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தார்கள் , சிலர் நண்பர்களுடனும் சிலர் தங்கள் குடும்பத்தினருடனும்  வந்திருந்தார்கள் , என்னை போல சில தனிமை விரும்பிகளும் அங்கே அமர்ந்து எதையோ தொலைத்து விட்டு தேடுபவர்களை போலவே அமர்ந்திருந்தார்கள்,

எங்காவது ஒரு இடத்தில் உட்கார வேண்டும் போல் இருந்தது , தண்ணீருக்கு அருகிலே சென்றால் நன்றாக இருக்குமே என்று நினைத்து நடந்தேன் , சில்லென்ற காற்று  அப்பா......... இந்த காற்று பகல் முழுவதும் இருந்தால் என்ன என்று மனதிற்குள் கேட்டுகொண்டே தண்ணீருக்கு அருகில் வந்தேன் , ஈரம் இல்லாத ஒரு இடம் தேடி அமர்ந்தேன்.

யாரோ என் பெயர் சொல்லி அழைப்பது போல தோன்றவே மெல்ல திரும்பி பார்த்தேன் , அருகே என் நண்பன், என்ன ஆச்சர்யம் …… கூடவே சந்தோஷம் ……. இப்போதெல்லாம் நண்பர்களை சந்திக்க ஏது நேரம் ? அவன் என் அருகில் வந்து அமர்ந்தான் என்ன  இந்த பக்கம் ? அதுவும் தனியா ? என்றவனிடம் சும்மாதான் போர் அடிச்சது ஆபீஸ்ல அதிக வேலை கொஞ்சம் காற்று வாங்கலாம் என்று வந்தேன் என்றேன், ஏன் இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லையே  என்று நான் கேட்கவே  எனக்கும் தொடர்ந்து வேலை இருந்ததால் அப்படியே இருந்து விட்டேன் மன்னிசிக்கோடா என்றான் , அது இன்னும்  சந்தோஷமாக இருந்தது .

ஏதேதோ பேசிக்கொண்டிருந்தவர்கள் சரி கிளம்பலாம் என்று வந்தவுடன் வா பேசிக்கொண்டே போகலாம் என்னோட வண்டி அங்கேதான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன் , என்ன ஒரு புத்துணர்ச்சி நம்பவே முடியவில்லை , இங்கே வரும்போது இருந்த மன நிலைக்கும் இப்போதுள்ள மன நிலைக்கும் எவ்வளவு வித்தியாசம் ..... உள்ளத்தில் எத்தனை தெளிவு ......வேலை வேலை என்று அலைந்து கொண்டு நமக்கு பிடித்த எதையும் செய்யாமல் எப்போதும் யார் யாருக்காகவோ வாழ்ந்துகொண்டிருப்பது  என்ன பிழைப்பு ? நம் மனதிற்கு பிடித்த காரியத்தை நமக்காக செய்யும்போது அதில் எத்தனை சந்தோஷம் ........ இனிமேல் நமக்காக கொஞ்சம் வாழ வேண்டும் என்ற முடிவோடு வீடு திரும்பினேன் .

Thursday, January 20, 2011

உனக்காக நான் .......

உயிர் போகும் வேளையிலும் 
உன் நினைவுகள்  வேண்டினேன் 
இறைவனிடம் என்னை காப்பாற்று ...... 
 எனக்காக இல்லை உனக்காக ......
 உன் அன்பு உண்மை என்றால்  
நான் வாழ்வேன் உன்னுடன் ...... 
இல்லை என்றால் என்னை 
மன்னித்து விடு , மீண்டும் சந்திப்போம் 
மறு ஜென்மத்தில் ..........

சுமப்பதால் சோர்வா ..............

சுமை சுமந்தால் சோர்ந்து போய் விடுவோமாம் ............ என்ன ஆச்சர்யம் ? உன்னையும் உன் நினைவுகளையும் சுமந்து இருக்கும் எனக்கு இன்றுவரை சோர்வே இல்லை ......... சோர்வான நேரங்களில் எல்லாம் உன் நினைவுகள் தானே என்னை சுகமாக்குகிறது ........

அன்பா விஷமா ?

அன்புக்கு ஏங்காதவர் யார் இந்த உலகில் ? அந்த அன்பை தேடி தேடி தானே பெறவேண்டி இருக்கிறது ....... நான் என்ன விதிவிலக்கா ? மலரில் தேன் சேகரிக்கும் வண்டாய் ஓடினேன் அன்பைத்தேடி ............ என்ன பயன் ? அந்த தேனில் தானே விஷமும் இருக்கிறது .........  தெரியாமல் அருந்திவிட்டேன் விஷம் உள்ள தேனை .......... 
அம்மா அழைத்தாள் 
கண்ணே வா என்று 
அப்பா சொன்னார் 
என் ராஜா  என்று 
ஆனால் நீயோ ஓடுகிறாய் 
அவள் பின்னால் நீதான் 
என் உயிர் என்று .............. 
உன்  கால்கள் வலிமை 
பெற்றுவிட்டதா இல்லை 
உன் அறிவு மங்கிவிட்டதா???????????

இதுதான் என் சந்தோஷம் !

உலகம் அழிய போகிறதாம் ,
அழுகிறார்கள் எல்லோரும் 
 எனக்கு மட்டும் சந்தோஷம் 
 நான் என் உயிரை கொடுத்து 
உன்னை வாழ வைப்பேன் 
 என்றாவது ஒரு நாள் 
என் நினைவு உனக்கு வரும் 
என்னை இழந்து விட்டதாக 
அன்று நீ வருத்தபடமாட்டாய் 
 உன்னோடு நான் உறவாக 
அல்ல உயிராக என் உயிரை 
உன்னோடு இணைக்க 
 எனக்கு வேறு வழி தெரியவில்லை 
இப்போது புரிகிறதா 
என் சந்தோஷத்தின் காரணம் ?

Wednesday, January 19, 2011

யார் பாவம் ? நானா கண்ணாடியா ?

என் வீட்டு நிலைக்கண்ணாடி கூட
உன் முகம் தான் காட்டுகிறது 
லஞ்சம் கொடுத்துவிட்டாயோ 
இல்லை அதிக அன்பு காட்டி 
மயக்கிவிட்டாயோ ! 
பாவம் அது நொறுங்கி 
போனால் சேராது ! 
அதற்கெப்படி தெரியும்
உன் கண்ணாமூச்சி  
விளையாட்டெல்லாம் ?  
முடிந்தால் மன்னிப்பு கேள் 
இல்லையேல் மன்றாடு 
என் முன் என்னை 
மட்டுமே காட்ட சொல்............

நான் தண்டவாளம் நீ ரயில் !

வெளிப்படையாக பேசியும் விளக்கம் கேட்டாய்,
உனக்கு விளங்கவில்லையா இல்லை எனக்கு விளக்குகிறாயா ?
காற்றினிலே நீ கலந்தாலும் மழையினிலே கலந்தாலும் என் தேடலும் உன்னுடன் தொடரும் ! என் பாதையை பார்க்க மட்டும் தான் நீ , என் பாதையை மாற்ற அல்ல , தடம் புரள்வது ரயில் தான் தண்டவாளம் இல்லை , நான் தண்டவாளம் நீ ரயில் !

பகுத்தறிவா இல்லை படிப்பறிவா ?

கடவுள் இல்லை என்றான் ஐயோ கடவுளே  என்றான் காலில் கல் பட்டதும்  ! இயற்கை அன்னையை வழிபட வேண்டும் என்றான் பெற்ற அன்னையை முதியோர் இல்லத்தில் அமர்த்திவிட்டு !
இது என்ன பகுத்தறிவா இல்லை படிப்பறிவா ?

மௌனம் சம்மதம் இல்லை சங்கடம் !

நான் உன்னிடம் காட்டிய அன்பில்
எந்த கட்டுப்பாடும் இல்லை
எதிர்பார்ப்பும் இல்லை
சிரிக்கும்போது கூட
என் இதயத்தில் இருந்து
தான் சிரித்தேன்
என் கண்ணீரில் கூட
வருத்தத்தை விட
ஏக்கத்தையே  வெளிப்படுத்தினேன்
 பல நேரம் பேசாமல்
மௌனமாய் இருந்தேன் ,
என் வார்த்தை உன்னை 
காயப்படுத்திவிடுமே 
என்ற பயத்தில் 
நீயும் என்னைப்போல்
மௌனமாய் இராதே
அது காயப்படுத்தும்  என்னை !
சில நேரம் மௌனம்
சம்மதம் இல்லை சங்கடம் !