Total Pageviews

Wednesday, June 8, 2011

நானும் நீ தானோ ?????

வானை பார்த்தால்   உன் நினைவு 
மேகத்தை பார்த்தால்  உன் நினைவு 

நிலவை பார்த்தால் உன் நினைவு 
விண் மீனை பார்த்தால் உன் நினைவு 

மரத்தை பார்த்தால் உன் நினைவு 
மலரை பார்த்தால் உன் நினைவு 

காக்கை பார்த்தால் உன் நினைவு 
கருங்குயிலை  பார்த்தால் உன் நினைவு

மழலையை பார்த்தால் உன் நினைவு 
மங்கையை பார்த்தால் உன் நினைவு 

கடலை பார்த்தால் உன் நினைவு
செம்மணலை பார்த்தால் உன் நினைவு 

உலகில் ஒவ்வொன்றும் உன்னை 
நினைவு படுத்தியதால் நான் என்னை 
பார்த்தேன் நானும் நீ தானோ ?????




ஏன் இப்படி ????????

 கலைந்தோடும் மேகங்களில் 
உன் உருவம் காணவில்லை ........ 

கடலின் நுரையில் 
உன் முகம் தெரியவில்லை ........

ஆற்றின் அலையில் 
உன் ஓசை இல்லை  ......

மலரும் மலரில்
உன் வாசமில்லை ......

பாடும் பறவையில் 
உன் குரல் இல்லை .....  

ஆனால் .....என்  இதயத்தில் 
மட்டும்  இடியாய் நீ ..........




உலகமே உன்னை சுற்றி...........

நிதானமாக நகரும்
கடிகார முள்ளை கேட்டேன்
உன் நினைவுகளை சுமந்து
செல்கிறேன் என்றது .......

ஓயாமல் கூவும் குயிலை
கேட்டேன் உன் பதில்
குரலுக்காக கூவிக்கொண்டு
இருக்கிறேன் என்றது ......

நீல வானின்
கருமேகங்களை கேட்டேன்
உன் சொல் கேட்டதும்
பொழிவேன் என்றது .....

மேகத்துள் ஒளிந்திருந்த
 வெண் நிலவை கேட்டேன்
உன் நிழலை காட்ட
வருவேன் என்றது ......

அந்தி வானின் ஆதவனை
 கேட்டேன் உன்னை
 உறங்க வைக்க
ஓடுகிறேன் என்றது .....

உலகமே உன்னை
 சுற்றி என்றால்
உன் நினைவுகள் மட்டும்
 என்னை சுற்றுவது ஏன் ??

Tuesday, May 10, 2011

இன்னும் எத்தனை பேர் ..... ????

ஏய் கொலை காரியே 
பலவிதமான கொலைகளை 
பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்

உள்ளிருக்கும் இதயத்தை 
ஓட்டையிடாமல் உடைத்தெடுக்கும் 
இந்த புதுமையான கொலையை 
உன்னால் மட்டுமே செய்ய இயலும் 
 என்று நினைக்கிறேன் 

சொல் அம்பு என்று 
கேள்வி பட்டிருக்கிறேன் 
ஆனால் உன் ஓவ்வொரு 
சொல்லிலும் ஈட்டி அல்லவா 
வைத்து எய்கிறாய் 

நீ என்ன கொலை களத்தில்
பணி புரிந்தாயா இல்லை இந்த 
கொலை செய்யும் வித்தையை 
எங்கேனும் கற்று வந்தாயா 

என்னை போன்று இன்னும் 
எத்தனை பேர்களின் இதயத்தை 
இப்படி உரு தெரியாமல் 
உடைதெடுத்தாய்

உன் கொலை பட்டியலில் 
இன்னும் எத்தனை பேர்  போதும் 
விட்டுவிடு இதயத்தை தேடி 
அலையும் இதயங்களை விட்டுவிடு  ....

நீ விளையாட ........!!!!

தூரத்தில் இருந்த வரை 
என்னை நிலவை போல ரசித்தாய் 
அருகில் வந்ததும் என்னில் 
களங்கம் காண்கிறாய் 

விலகி செல்லவும் விடாமல்
வழி மறித்து நிற்கிறாய் 
விருப்பமே இல்லாமல் 
விரும்பி வருகிறாய் 

குழந்தையாய் இருந்தவளை 
குரங்காய் மாற்றினாய்
குதிக்க விடாமல் 
கட்டி போட்டாய் 

இன்னும் என்னென்ன 
செய்ய போகிறாய் 
என்று என்னிடம் கூறு 

உயிருள்ள என்னை 
உயிரற்றவளாக்கி 
தருகிறேன் நீ விளையாட ........

புது அனுபவம் ....!!!!!!!


புரியாத இடம் புது விதமான 
மரங்கள் செடிகள் கொடிகள் 
புது விதமான கட்டிடங்கள்

இயற்கையான சூழலின் 
மனதை மயக்கும் காற்று
இன்னும் என்ன சொல்ல 

 மக்களின் மனதில் என்னதான்
உள்ளது என்று  புரிந்து 
கொள்ள இயலாத நிலை

தாங்கள் எங்கு செல்கிறோம் 
எதற்க்காக செல்கிறோம் என்று 
தன்னிலை மறந்தபயணம்

இயந்திர வாழ்கையை 
பழகிப்போன மக்களுக்கு இது 
போன்ற புது இடம் புது வாழ்க்கை

வார்த்தைகளால்வடிக்க இயலாத 
நிலை எப்படி ஆனாலும்
இது நிச்சயம் ஒரு புது அனுபவம் ....

Friday, May 6, 2011

பிரிந்து சென்று விடு .....!!!!!

அன்பே தெய்வமாய்
அமைதியே வாழ்க்கையாய் 
தூரத்தில் தோன்றிய நதி 
போல் செல்லும் தடமும் 
சேரும் இடமும் அறியாமல் 
பயணித்து கொண்டு இருந்த 
என்னுள் இடையில் இணைந்த 
ஓடையாய் நீ வந்து கலந்தாய்
திசையே தெரியாமல் நான் 
பயணிக்க எந்த நம்பிக்கையில் 
நீ வந்து என்னுடன் சேர்ந்தாய் 
எனது இந்த பயணத்தில் 
இடையூறு இல்லாமல் 
பயணிக்கும் துணிவு 
உனக்கிருந்தால் என்னுடன் வா 
இல்லையேல் தடம் மாறி 
ஓடையாகவே பிரிந்து சென்று விடு .....

நாள் காட்டியா இல்லை திசை காட்டியா ... !!!

தொலை தூர பயணத்தில் 
துணையாய் வந்தவனே 
பல வழி தடங்களில்
பல முறை பலரோடு 
பயணம் செய்த எனக்கு 
இந்த பயணம் மட்டும் 
ஏனோ புதிதாய் !! 

வாழ்கை பயணத்தில் 
திக்கு தெரியாமல் 
பயணித்து கொண்டு 
இருந்த எனக்கு திசையை 
காட்டி என் பாதையையும் 
மாற்றினாயே  நீ என்ன நாள் 
காட்டியா இல்லை திசை காட்டியா ... 

இந்த புதிய பயணத்தில்
உன்னுடன் ஆனந்தமாய்
கை கோர்த்து பயணிக்கும்
எனக்கு ஆண்டவனாய் 
இல்லை என்றாலும் 
ஆதவனாய் நின்று வழி காட்டு !!!!

விலகி விலகி செல்கிறாயே !!!!!!

அன்பை வேண்டி அனுதினமும் 
ஆவலாய் ஓடோடி வந்தேன் 
அருகில் வந்தபோது அன்பை 
ஊட்டினாய் அதையே வேண்டினாய்  !!

விலகி சென்ற நேரம் பார்த்து 
விருப்பம் இல்லாததை விரும்பி 
செய்து விலகி விலகி சென்றாயே !!

கொடுத்த அன்பையும் குற்றம் 
காணும் அளவுக்கு நான் 
குனிந்து நின்றேனே !!

தெரிந்தும் தெரியாமல் நாடகமாடி 
நீ ஏமாற்றுவது என்னை 
அல்ல உன் உயிரை 
என்பதை மறந்துவிடாதே !!

நெஞ்சம் வாடும் போதெல்லாம் 
தஞ்சம் நீயே என்று அங்கே 
உன்னிடம் கொஞ்சி 
விளையாடியதும் நான் தானே !!

புரிந்து கொள் ...புரிந்து கொள் ...!!!!!

அமைதியாக ஊர்ந்து 
செல்லும் ரயிலின் 
இருக்கையில் அன்னையாய்
நீயும் உன் மடியில் 
அன்பு குழந்தையாய் நானும் 

இரக்கமே இல்லாமல் நான் உறங்க
அன்பும் பாசமும் உன் கண்ணில் 
ஏக்கமும் தவிப்பும்என் நெஞ்சில்
கனிவுடன் என்னை கவனிக்க நீயும்
கண்ணீரை அடக்க மாட்டாமல் நானும் 

உண்மை அன்பை 
மட்டுமே கேட்ட நான் 
இன்று வாய் பேச 
மாட்டாமல் ஊமையாய் 
உன் முன்னே ....

உள்ளம் என்று ஒன்று 
உனக்கிருந்தால் என்
உண்மை அன்பை
புரிந்து கொள் ...

Thursday, April 14, 2011

சூரியனுக்கு சொந்த காரி !!!!

நீ என்ன சூரியனுக்கு
சொந்த காரியா ....
மாலை வேளையில்
மறையும் சூரியனை
கண்டவர்  கண்களுக்கு
காண்பவை யாவுமே
ஆங்காங்கே சிவப்பாக
தோன்றுவதை போல
உன் முகத்தை பார்த்த
எனக்கு எதை பார்த்தாலும்
உன் முகமே தெரிகிறதே !!
உன்னை மன்றாடி
கேட்கிறேன் சிறிது நேரம்
என் கண்களை விட்டு
 விலகி செல் நான் காண
வேண்டிய காட்சிகள்
இன்னும் ஆயிரம் இங்கே ....!!

சுமை தாங்கி ... !!!!!!!!!!!!!!!!!!!!

ஏய் பெண்ணே உன்
கண்களில் கண்ணீரா ...!!!!

பலரின் கண்ணீரை
துடைத்தவள் நீ இன்று
 உன் கண்ணீரை துடைக்க
இன்னொரு ஆளா ...

பலரின் கண்ணீரை உன்
அன்பினால் விலை
பேசியவள் நீ இன்று
உன் கண்ணீரை கவலை
கொண்டு விலை பேசுகிறாயா ...

பலரின் சோக கண்ணீரை
ஆனந்த கண்ணீராக மாற்றி
தந்தவள் நீ இன்று உன்
கண்களில் சோக கண்ணீரா ...

பலரின் சோகங்களை
 சுமப்பவள் நீ இன்று
உன் சோகங்களை இறக்கி
 வைக்க இடம் தேடுகிறாயா ....

உன் அன்பின் நிழலில்
உறங்கும் அன்பு
உள்ளங்களின் உறக்கத்தை
உன் கண்ணீரை காட்டி
கலைத்து விடாதே !

வேண்டாம் பெண்ணே
வேண்டாம் நீ என்றுமே
சோகம் தாங்கும் சுமை தாங்கி!!

Tuesday, April 12, 2011

என் உருவமும் தான்...!!!!

சிறு குழந்தையாக இருந்தபோது 
வானத்தில் செல்லும் மேக 
கூட்டங்களை பார்த்து 
கற்பனையில் வடித்தேன் 
பல நூறு உருவங்கள் இன்றும்  
உன்னை நினைத்து அதே
கற்பனையில் பல நூறு 
வடிவங்களாக வடித்து 
கொண்டு இருக்கிறேன் 
உன்னை அன்று அந்த 
மேகங்களை காற்று வந்து 
கலைத்து விட்டு சென்றது
போல என் நினைவுகளில்
உருவங்களாக வடித்த 
உன்னை கலைத்து விடாதே
 கலைந்து போவது உன் 
உருவம் மட்டுமல்ல 
என் உருவமும் தான்...!!

உன் பாத சுவடுகள் ... !!

அந்த கரடு முரடான  பாதையில் 
வெகு தூரம் நடந்து சென்றேன் 
கால்கள் பொத்துபோயின 
மனதும் சலித்து விட்டது 
நடக்க இயலாமல் தவித்து 
போய் சோர்ந்து  அமர்ந்தேன்
மரத்தடியில்.. வழக்கம்போல 
சிந்தைனையில் உன் 
நினைவுகள் உன்னை 
நினைத்தால் நேரம் போவதே 
தெரியாதே சலிப்பெல்லாம்
மறந்து போகுமே ..எழுந்து 
நடந்தேன் பாதையில் புது 
மாற்றம் என்ன அழகான
ஒற்றையடி பாதை ஆங்காங்கே 
மலர்கள் ஆசையாய் நடந்தேன் 
அதன் வழியே... பிறகுதான் 
தெரிந்தது அது மலர்கள் 
அல்ல உன் பாத சுவடுகள் என்று ....

Monday, April 11, 2011

அன்னை ..............!!

மகனே நீ என்னை ஏறி 
மிதித்தாலும் எட்டி 
உதைத்தாலும் நான் 
உன் அன்னை உன்னால் 
நான் என்றுமே காயப்பட்டதில்லை
 நீ உண்ணாத போது நானும்
உண்டதில்லை நீ உறங்காத
போது நானும் உறங்கியதில்லை
பொருந்தாது என்று
தெரிந்திருந்தும் உன் 
காலடி தடத்திலெல்லாம்
என் காலடியை வைத்து 
பார்த்தேன் பலமுறை 
ஊர் போற்றும் அறிவாளியாக
 நான் இருந்தாலும் உனக்கு  முன் 
முட்டாளாகி போனேன் !!!!!

Sunday, April 10, 2011

உன் நினைவுகளை எடுத்து செல் !!

 அன்பே உன் நினைவுகளில்
மூழ்கி ஒற்றை மரமாய் நான்......

கர்ப்ப காலத்து அன்னையை
போல கவனம் முழுதும் உன்னிடத்தில் ......

நீர் குடித்த கார்மேகமாய்
உன் நினைவுகளை
சுமந்து செல்கிறேன் ......

திசை தெரியாத மரக்கலம்
பயணிப்பது போல உன்
நினைவலைகளில் சிக்கி

செல்லும் இடமும் சேரும்
இடமும் தெரியாமல் பயணித்து
கொண்டு இருக்கிறேன்

என் உயிர் பிரியும் முன்
உன் நினைவுகளை விட்டு
 செல்ல இடம் தேடவேண்டுமே .....

உனக்கும் என் நினைவிருந்தால்
என் நினைவுகளை தந்துவிட்டு
உன் நினைவுகளை எடுத்து செல்

Saturday, April 9, 2011

நிலவின் களங்கம் ....!!!!!!


நிலவு தூய்மையானது
 களங்கம் இல்லாதது என்று 
அறிந்திருந்தேன் உன்னை 
சந்தித்த நாள் முதல் நீயும் 
ஒரு நிலவாய் என் முன்னே 
ஆனால் அன்று பார்த்த 
அதே நிலவில் இன்று ஏதோ 
களங்கம் அன்று இது என் 
கண்களுக்கு தெரியவில்லையா 
இல்லை நான் கண்டு 
கொள்ளவில்லையா !! 
அடுத்தவரின் உதவியால் 
ஒளிரும் நிலவே நீ ஒரு
 நாள் மட்டும் உன்னை 
ஒளித்துகொள்வது உன் மனதில்
 உள்ள களங்கத்தினால் தானோ !!   
ஏய் நிலவே உன் தூய்மைதான் 
உன்னை விரும்ப வைத்தது 
உன் களங்கத்தை காட்டி 
உன்னை வெறுக்க வைக்காதே 
எப்போதும் நான் உந்தன் ரசிகன் !!!!

சுட்ட உண்மை .....!!!!!

உண்மை சில நேரங்களில் 
சுட்டுவிடும் பல நேரங்களில் 
கெட்டுவிடும் இன்று இங்கே
 நான் கேட்ட உண்மை என்னை 
சுட்டுவிட்டது வெட்டுபட்ட
 இடம் ஆறிவிடும் சுட்டுபட்ட
 இடம் நிறம் மாறிவிடும் திசை 
தெரியாத பறவைகள் எங்கோ
 சந்தித்து கொள்வது போல
நாம் இங்கே சந்தித்து கொண்டோம் 
பாதை மாறி பயணம் செய்ய 
விரும்பாமல் புது பாதையை 
தேர்ந்தெடுத்தோம் கரடு
 முரடான பாதையில் கால்கள்
 தான் பத்திவிடும் என்று
 நினைத்தேன் ஆனால் இங்கே 
பத்திவிட்டது மனம் சோதனை கால 
பக்தனை போல சோர்ந்து போய் 
இருக்கிறேன் கடற்கரையில் 
தாகத்துடன் நிற்கிறேன் என் 
தாகத்தை தணிக்க இந்த கடல் 
தான் வழி காட்ட வேண்டும் .......

மாற்றி தருகிறேன் உன்னை !!!

கடற்கரை மணலில் கைகளை
தூக்கி கொண்டாடும் குழந்தையாய்
உன்னை நினைத்திருந்தேன்
ஆனால் நீயோ கரும் இருளில்
வரும் கள்வனாகி போய் விட்டாயே !! 

பட்டாம் பூச்சியாய் பறந்து விடலாம்
என்று எண்ணி இருந்தேன்
கூட்டு புழுவாகவே இருந்துவிட
 கட்டளை இட்டாயே  !!  

என் கண்களின் வெண்மையும்
கருமையுமாக உன்னை
வைத்திருந்தேனே உதிர்ந்துபோன
 இமையாய் விழுந்து விட்டாயே !!

என் அன்பு தோட்டத்தின்
ஒற்றை ரோஜாவாய் உன்னை
வைத்திருந்தேன் பூக்கூடையில்
 போய் அமர்ந்து கொண்டாயே !!

கலை சிற்பமாய் உன்னை
வடித்து வைத்தேன் நீயோ
கல்லறை தோட்டத்தில்
சிலையாய் நின்றுகொண்டாயே !!

உன்னை என் கைகளில்
கொடு ஒரே வானின்
ஒற்றை நிலவாய்
மாற்றி தருகிறேன் ......!!!

காணாமல் போனாயே !! !! !!

தெளிந்த நீரோடையாய் 
இருந்த என் மனது  கல் 
எறிந்த குளத்தின் நீர் 
அலைகளை போல 
மாறிவிட்டது

 சூரியன் சந்திரன் விண்மீன்
வேறுபாடு இல்லாமல் இருந்த என்
 மனது  இன்று புது 
விண்மீனை கண்டது

ஊரார் அழுகையும் ஓசையாய்
கேட்கும் என் காதுகளில் 
குழந்தையின் குரலும் ஓலமாய் !!

இங்கே காதலனை  கண்ட 
காதலியாய் இருந்த என் மனது
 இன்று கீரியை கண்ட
 நாகமாய் மாறிவிட்டதே !!  

தென்றல் காற்றாய் 
வீசிகொண்டிருந்த என்னை
 கடும் புயலாய் மாற்றி விட்டாயே !!  

ஊமையாய் இருந்திருந்தால் 
வாய் மொழியாமல் 
இருந்திருப்பேன் ஆனால்
 இன்றோ வாய் பேச 
வார்த்தைகளையே தேட 
வைத்து விட்டாயே !!

 மூடிய இமைகளுக்கு முன் வந்த
 நீ இன்று திறந்திருந்தும் 
காணாமல் போனாயே !!